பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வெறும் 4 ரூபாயில் பயணம்… 1947 ம் ஆண்டு வாங்கப்பட்ட பயணசீட்டு- சமூக வலைத்தளங்களில் வைரல்..!

ந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு பயணிக்கப்பட்ட ரயில் டிக்கெட்டின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்த ஆரம்ப காலத்தில் வாங்கப்பட்ட ரயில் பயணச்சீட்டு குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி மற்றும் அமிர்தசரஸ் இடையே பயணம் செய்ய இந்த டிக்கெட்டைப் பயன்படுத்தலாம்.

இந்த டிக்கெட்டில் 9 பேர் பட்டியலிடப்பட்டுள்ளனர். இந்த பழைய டிக்கெட் விலைகள் மற்றும் கட்டணங்களைக் கண்டு பலர் அதிர்ச்சியடைகின்றனர்.

அப்போது, ​​ஒன்பது நபர்களுக்கான டிக்கெட்டின் விலை வெறும் 36 ரூபாய் 9 அணா மட்டுமே. மக்கள் இந்த விலை வித்தியாசத்தை வேறுபடுத்தி இப்போது சமூகவலைத்தளங்களில் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

பாகிஸ்தான் ரயில் காதலர்கள் என்ற ஃபேஸ்புக் பக்கம் வைரலான இந்த ரயில் டிக்கெட்டை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது. அதில், “சுதந்திரத்திற்குப் பிறகு 17-09-1947 அன்று ராவல்பிண்டியில் இருந்து அமிர்தசரஸ் வரை பயணம் செய்ய 9 நபர்களுக்கு 36 ரூபாய் & 9 அணாக்கள் விலையில் வழங்கப்பட்ட ரயில் டிக்கெட்டின் படம். அநேகமாக ஒரு குடும்பம் இந்தியாவிற்கு குடிபெயர்ந்திருக்கலாம்” என்று பதிவிடப்பட்டிருந்தது.

சரியாக சுந்திரம் பெற்று ஒரு மாதம் ஆனபோது வாங்கப்பட்ட இந்த பயணசீட்டு, ​​ஒன்பது நபர்களுக்கான வெறும் 36 ரூபாய் 9 அணா மட்டுமே. அதாவது நபர் ஒருவருக்கு 4 ரூபாய் மற்றும் 1 அணா மட்டுமே.