கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் சீனிவாசா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் ராம்கி ( வயது 35) தச்சு தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். நேற்று அவரது வீட்டின் மாடியில் குடிபோதையில் நடந்து கொண்டே செல்போன் பேசினாராம். அப்போது திடீரென்று கீழே விழுந்தார் .இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலைய சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜோதிமணி போலீஸ்காரர் கோட்டைசாமி ஆகியோர் நேற்று அதிகாலையில் மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தினர். அவர் நிற்காமல் சென்றார். எனவே அவரை பைக்கில் துரத்திச் சென்று பிடித்தனர். விசாரணையில் அவர் புதுக்கோட்டை ...

கோவை பீளமேடு அண்ணா நகர் ஆறுமுகம் லேஅவுட் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் அந்த பகுதியில் மெஸ் நடத்தி வருகிறார் .இவரது மகன் ஹரிஹரன் (வயது 22) அவரது தந்தையின் ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.இவர் ஆவராம்பாளையத்தைச் சேர்ந்த வைஷ்ணவி என்ற பெண்ணை காதலித்தாராம்.அதே பெண்ணை விக்னேஷ் என்பவரும் காதலித்து வந்தாராம். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ...

கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய பகுதிகளில் சப்- இன்ஸ்பெக்டர். சுல்தான் இப்ராஹிம், ஏட்டு சிவப்பிரகாஷ் ஆகியோர் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது கண்ணார்பாளையம் பிரிவு சுடுகாடு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் கைப்பையுடன் நின்று கொண்டிருந்த 4 நபர்களை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் திருச்சூரை சேர்ந்த ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதையடுத்து, கடந்த ...

புதுடெல்லி: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்கள் முன் உரையாற்றுவதற்காக ராகுல்காந்தி டெல்லியில் இருந்து இங்கிலாந்து சென்றுள்ளார். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பிசினஸ் ஸ்கூலின் முன்னாள் மாணவரான காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒரு வார பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்டு லண்டன் சென்றுள்ளார். அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் முன் உரையாற்றும் ராகுல்காந்தி, ’21ம் நூற்றாண்டில் பாடங்களைக் ...

லக்னோ: உத்தரப் பிரதேசம் ஒரு காலத்தில் மோசமான சட்ட ஒழுங்கை கொண்டிருந்ததாகவும், தற்போது இந்த விஷயத்தில் பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பாஜக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் காவல்துறையில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து ...

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆசை இருந்தால் அவர் கண்டிப்பாக பிரதமர் வேட்பாளராக நிற்கலாம் என்று நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னை வந்த ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, பிரதமர் வேட்பாளராக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் இருக்க கூடாது என்ற கேள்வி எழுப்பி இருந்தது பல்வேறு தரப்பினர் ...

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிப்பான்களின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்த ஆட்சியில் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக ஜ.எஸ்.கே.பி என்று தீவிரவாத அமைப்பை ஒழிக்க தலிபான் தலைமையிலான அரசு தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த நிலையில் தலிபான் அரசின் தலைமையிலான படைகள் இரண்டு ஐ.எஸ் தளபதிகளை சுட்டுக் கொன்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...

சென்னைத் துறைமுகம், புதுச்சேரி துறைமுகம் இடையே சரக்குப் போக்குவரத்து சேவை தொடங்கியது. இந்த சேவையை சென்னைத் துறைமுக ஆணையத்தின் தலைவர் சுனில் பாலிவல் கொடியசைத்து தொடக்கி வைத்தார். மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின்கீழ் கடந்த 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15-ஆம் தேதி, சென்னைத் துறைமுகம் – புதுச்சேரி துறைமுகம் இடையே சரக்குப் போக்குவரத்து சேவை ...