கோவை : தமிழ்நாடு கவர்னர் பி.என்.ரவி நேற்று மதியம் கோவை வந்தார். அவிநாசி ரோடு சித்ரா சந்திப்பில் அவரது கார் வரும் போது கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 53 பேர் மாவட்ட தலைவர் பத்மநாபன் கருப்பு கொடி காட்ட முயன்றனர். அவர்களை பீளமேடு போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. ...

கோவை சாய்பாபா காலனி,என். எஸ் .ஆர். ரோட்டில் உள்ள நெசவாளர் காலனி சேர்ந்தவர் ராஜன் (வயது 44) லாரி கிளீனர். இவரது 2 வயது ஆண் குழந்தை தன்வீன். இவன் பிறப்பில் இருந்து நுரையீரல் பாதிக்கபட்டிருந்தான்.இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.இந்த நிலையில் நேற்று தூங்கிக் கொண்டிருந்த தன்வீனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அரசு மருத்துவமனைக்கு ...

சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதா? இல்லையா? என்று பதிலளிக்க ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுகவின் இடைக்கால ...

சென்னை: பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். மார்ச் 20ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலக வளாகத்தில் இருக்கக்கூடிய நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ...

கலிபோர்னியா: கலிபோர்னியாவில் பசரோவில் அடுத்தடுத்து உருவான புயல்கள் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கலிபோர்னியாவில் பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்தும் முடங்கியுள்ளது. வீடுகள் மற்றும் கட்டிடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ...

கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் துடியலூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் ஆனந்தகுமார், ரகு ,அகமது, ஆகியோர் குடும்பத்துடன் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர். அவர்களை துடியலூரில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ நிறுத்த விடாமல் அரசியல் ரீதியாக சிலர் தடுப்பதாக புகார் செய்தனர். இதனால் தங்கள் ...

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை அன்று சிவகங்கையில் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். மதுரை விமானநிலைய பேருந்தில் எடப்பாடி பழனிசாமி பயணித்த போது அமமுக பிரமுகர் ராஜேஸ்வரன் என்பவர் ...

சூரிய குடும்பம் உருவானபோது கோளாக உருவாகாமல் நின்று போன சிறிய பாறை பொருள்கள்தான் சிறு கோள்கள் அல்லது விண்கல் என்று அழைக்கப்படுகின்றன. சூரிய குடும்பத்திற்கு வெளியே பல விண்கல் சுற்றி வருகின்றது. பெரும்பாலான விண்கல் பூமிக்கு அருகே பாதுகாப்பாக கடந்து செல்லும். அதில் ஒரு சிலது மட்டுமே பூமியை தாக்கும். இந்நிலையில் வருகின்ற 2046 ஆம் ...

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சுற்றுவட்டாரத்தில் 50க்கும் மேற்பட்ட நாய்களை மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்றதால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மலை அடிவாரப் பகுதியான இந்த கிராமத்திற்கு அடிக்கடி வனவிலங்குகள் வருவதால், பாதுகாப்பிற்காக வீடுகள் தோறும் நாய்கள் வளர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்றதாகவும் ...

ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்திய திரைப்படங்களின் குழுவினர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்திய திரைப்படங்களின் குழுவினர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று காலை (இந்திய நேரப்படி) 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த ...