தொடர் கனமழை.. வெள்ளத்தில் மிதக்கும் கலிபோர்னியா :10 ஆயிரம் பேர் வெளியேற்றம்- மக்கள் அவதி..!

லிபோர்னியா: கலிபோர்னியாவில் பசரோவில் அடுத்தடுத்து உருவான புயல்கள் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

கலிபோர்னியாவில் பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்தும் முடங்கியுள்ளது. வீடுகள் மற்றும் கட்டிடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் இருந்தவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்.

சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். புயல், வெள்ளத்தை தொடர்ந்து கலிபோர்னியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மின் இணைப்பு துண்டிப்பால் கலிபோர்னியா மக்கள் தவித்து வருகின்றனர். கிறுஸ்துமஸுக்கு பிறகு கலிபோர்னியாவை தாக்கும் 10வது நிகழ்வாகும். கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டிரோன் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.