கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற 3 ஆட்டோ டிரைவர்கள் – கோவையில் பரபரப்பு..!

கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் துடியலூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் ஆனந்தகுமார், ரகு ,அகமது, ஆகியோர் குடும்பத்துடன் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர். அவர்களை துடியலூரில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ நிறுத்த விடாமல் அரசியல் ரீதியாக சிலர் தடுப்பதாக புகார் செய்தனர். இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறினார்கள்.பின்னர் இவர்கள் ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த மண்எண்ணையை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி போலீஸ் கமிஷனர் கணேசன் மற்றும் போலீசார் ஓடிச் சென்று அதைத் தடுத்தனர். பின்னர் 3 பேரும் போலீஸ் வேனில் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் 3 பேரும் மீதும் தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . மேலும் விசாரணை நடந்து வருகிறது.கோவை கலெக்டர் அலுவலகம் முன் ஆட்டோ டிரைவர்கள் 3 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.