கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ஓம் சக்தி கோவில் வீதியைச் சேர்ந்தவர் அனிதா. இவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சின்னதுரை அவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பெரியாகவுண்டனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக ஏராளமான காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. தோட்டங்கள் மற்றும் சாலையோரங்கள், குடியிருப்பு பகுதிகளில் உள்ள மரத்தடிகளில் ஏராளமான காகங்கள் உயிரிழந்து கிடந்துள்ளது. பின்னர் இறந்த காகங்களை மர்ம நபர்கள் எடுத்துச் சென்ற சம்பவங்களும் அதிகரித்து வந்தன. இதனை ...
நேற்று, திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன். அவர் மருத்துவமனையின் திவீர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைப்பெற்ற இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளாங்கோவன், நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை போரூரில் ...
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வருடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தின் 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை (பட்ஜெட்) வருகிற மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. தற்போது பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட சில முக்கிய அறிவிப்புகளை வருகிற பட்ஜெட்டில் ...
திடீரென வேகமெடுத்த புதிய வகை வைரஸ் காய்ச்சல் – சிறுவர்கள், முதியவர்கள் உட்பட 3,000 பேர் பாதிப்பு ..!
நாடு முழுவதும் எச்3என்2 உள்ளிட்ட இன்ஃப்ளூயன்சா வகை வைரஸ் காய்ச்சல்களால் 3,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா தொற்றும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 617 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ‘எக்ஸ்பிபி.1.16′ புதிய வகை கரோனா காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்ஃப்ளூயன்சா-ஏ வகை வைரஸான எச்3என்2 தொற்று, நாடு ...
புதுடெல்லி: தெலங்கானா முதல்வரின் மகளான கவிதாவுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்த நிலையில், இம்மனு மீதான விசாரணையை வரும் 24ம் தேதி விசாரிப்பதாக கூறியுள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு ஊழல் வழக்கில், டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர். திகார் ...
அமைதிக்கான நோபல் பரிசுக்கு மிகப் பெரிய போட்டியாளர் பிரதமர் மோடிதான் என்று நோபல் பரிசுக் குழுவின் துணைத் தலைவர் அஸ்லே டோஜே மிகப்பெரிய கருத்தை தெரிவித்துள்ளார். இன்று உலகில் உள்ள அமைதியின் மிகவும் நம்பகமான முகமாக பிரதமர் மோடி திகழ்கிறார் என்றும்,போரிடும் நாடுகளுக்கு இடையே போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்டக்கூடிய நம்பிக்கைக்குரிய தலைவராக பிரதமர் மோடி ...
திருச்சி: திருச்சி காவல் நிலையத்தில் அமைச்சர் கே.என்.நேரு – திருச்சி சிவா ஆதரவாளர்களிடையே மோதல் சம்பவம் ஏற்பட்ட நிலையில் பெண் போலீஸ் ஒருவர் காயமடைந்துள்ளார். திருச்சி எஸ்பிஐ காலனியில் நமக்கு நாமே திட்டத்தில் இன்று புதிய டென்னிஸ் அரங்கை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்க வந்திருந்தார். அந்த திறப்பு விழா ...
சென்னை: திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல், கல்வித்துறை கண்விழித்துவிட்டது. இந்தியாவிலேயே உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடுதான் முதலிடம். இது தானாக கிடைக்கவில்லை. அதற்குப் பின்னால் அரசின் கடுமையான திட்டங்கள் உள்ளன. முதல்வர் ஸ்டாலினின் முழுமையான உழைப்பு ஒளிந்திருக்கிறது. ஆகவேதான், அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை படித்துவிட்டு கல்லூரி படிப்பிற்குச் ...
நாகர்கோவில்: தக்கலை அருகே ஆபாச ‘வீடியோ’வில் சிக்கிய பாதிரியார் பெனடிக் ஆன்றோ, வேறு சர்ச்சுக்கு மாற்றப்பட்டார். அவர் மீதான புகாரை ஏ.டி.எஸ்.பி., விசாரிக்கவுள்ளார். தக்கலை அருகே உள்ள சர்ச் பாதிரியார் பெனடிக்ஆன்றோ. ஒரு வாரத்துக்கு முன் இவரை தாக்கிய கும்பல் அவரது லேப்டாப்பை பறித்து சென்றது. இதுதொடர்பாக பிலாவிளை சட்டக்கல்லுாரி மாணவர் ஆஸ்டின் ஜியோ மீது ...













