மத்திய அரசுக்கு எதிராக 2 வது நாளாக மம்தா பானர்ஜி தர்ணா..!

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் எந்த திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை என மத்திய அரசை கண்டித்து, 2 நாள் தர்ணாவை நேற்று (மார்ச் 29) மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி துவக்கினார். மத்திய அரசு, மேற்கு வங்கத்திற்கு எந்தவொரு நிதியையும் அளிப்பதில்லை.
நாட்டிலேயே மத்திய பா.ஜ., அரசிடம் இருந்து எதுவும் பெறாத ஒரே மாநிலம் மேற்குவங்கம் தான். நிலுவையில் உள்ள தொகையையும் கொடுக்கவில்லை. இந்தாண்டு வெளியான மத்திய பட்ஜெட்டில் கூட எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. 100 நாள் வேலை திட்டங்களுக்கு எதும் நிதி ஒதுக்கவில்லை என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் மத்திய அரசின் இந்த பாகுபாடை கண்டித்து கோல்கட்டாவில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பாகநேற்று (மார்ச் 29) 2 நாள் தர்ணா போராட்டத்தை மம்தா துவக்கி உள்ளார். இப்போராட்டம் இன்று  மார்ச் 30ம் தேதி மாலை வரை தொடரும். மேலும் போராட்டத்தில் திரிணமுல் காங்.,தொண்டர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், திட்டங்களுக்கும் நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.