கோவை : மும்பையை சேர்ந்தவர் 43 வயது பெண். இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். அவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். பி.எச்.டி .முடித்த அந்தப் பெண் இரண்டாவது பிஎச்.டி படிப்புக்காக கோவையில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்திற்கு அடிக்கடி வந்து சென்றார். அந்த ...
கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஆமந்தக் கடவை சேர்ந்தவர். முருகன் ( வயது 49) கூலிதொழிலாளி. இவரது மனைவி கலாமணி ( வயது 45) இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் .அவர்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு முருகனின் மனைவி கலாமணி உடல் நலக் குறைவால் திடிரென்று ...
கோவை : சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் புகழ் ராஜா (வயது 37) இவர் கடந்த மாதம் 19 ஆம் தேதி சேலத்தில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்து கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பொது வார்டுக்கு ...
கோவை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:நாளை (செவ்வாய்க்கிழமை) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஜெயின் கோவில்களின் அருகாமையில் செயல்படும் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி ,பன்றி இறைச்சி, கடைகளை மூடுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது . இந்த உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளால் ...
கோவை துடியலூர் பக்கம் உள்ள பிளிச்சி, பெட்டதாபுரத்தை சேர்ந்தவர் அய்யாசாமி ( வயது 54 ) கூலி தொழிலாளி .இவரது மனைவி செல்வி ( வயது 38) இவர்களுக்கு திருமணம் ஆகி 23 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அய்யாசாமி குடிப்பழக்கம் உடையவர். இதனால் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு ...
கோவை : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கோழிக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மகள் வித்யா ( வயது 21 ) இவர் கோவை கோவில்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எட். படித்து வந்தார். சரவணம்பட்டியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்தார். இவருக்கு நேற்று திடீர் வயிற்றுவலி ஏற்பட்டது. அவரை அங்குள்ள ஒரு ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. இதில் குறிப்பாக தலமலை, கேர்மாளம் வனப்பகுதிகளில் கரடிகள் அதிக அளவில் நடமாடுகின்றன. இந்த நிலையில் நேற்று திம்பம் – தலமலை வனச்சாலையில் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் ...
சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளதால் கோவிலில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வன பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர்ப் பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் நேற்று மாலை சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு வந்தனர். அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் முருகேசனிடம் மூன்று பேரும் சேர்ந்து ஒரு செல்போனை கொடுத்து இந்த செல்போன் மணிக்கூண்டு அடுத்துள்ள பள்ளிவாசல் அருகே சாலையில் கீழே கிடந்ததாகவும், இதை ஒப்படைக்க வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். சிறுவர்களின் நேர்மையை ...
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடமான பெரியநாயக்கன் ...













