சென்னை: நேற்று தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. அதிகபட்சமாக திருப்பத்தூரில் 104.36°F வெயில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்க உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு ...
எதிர்கட்சித் தலைவர் பேசுவதை நேரலை வழங்காததைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் இன்று கருப்பு மாஸ்க் அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை.. தமிழக சட்டப்பேரவையில் நேற்று பேசிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, “முதல்வர் பேசும் போது நேரலை ஒளிபரப்பாகிறது. ஆனால் தீர்மானத்தை கொண்டு வந்த எதிர்க்கட்சித்தலைவர் பேசும் போது மட்டும் நேரலை கட் செய்யப்படுகிறது . இதை யாரோ ...
கோவை, கரும்புக்கடை, திப்பு நகர் பகுதியில் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு ஒருவர் இருசக்கர வாகனத்தில் மூட்டைகளை ஏற்றுக் கொண்டு இருந்தார். அவரை பிடித்து மூட்டைகளை ஆய்வு செய்தனர். அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர் போத்தனூர் அன்பு நகர் பகுதியை ...
நாதே கவுண்டன்புதூர் மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ, இரண்டாவது நாளாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈட்டுபட்டுள்ள வனத்துறையினர். கோயமுத்தூர் வன கோட்டத்திற்கு உட்பட்ட மதுக்கரை வனச்சரகத்திலுள்ள நாதே கவுண்டன்புதூர் அருகே உள்ள மலையில் நேற்று காட்டுத்தீ ஏற்பட்டது. போலாம்பட்டி பிளாக் II அடர்வனப்பகுதியிலுள்ள காய்ந்த புற்கள் நிறைந்த 50 ஹெக்டேர் பரப்பளவில் தரிசு ...
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் உட்கோட்டம் துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளியில் படிக்கும் 10 வயது சிறுமியை ஆசிரியர் பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக கோவை ஆனைகட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை துடியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் ...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு பார்வை மங்குவதாகவும் நாக்கு மரத்துப்போவதாகவும் தகவல் கசிந்துள்ளது. தற்போதைய சூழலில், மருத்துவர்களின் ஒரு சிறப்பு குழுவினருடனேயே புடின் பயணம் மேற்கொள்கிறார் என கூறப்படுகிறது. கடுமையான தலைவலியால் புடின் அவஸ்தைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் பார்வை மங்குவதாகவும் நாக்கு மரத்துப்போவதாகவும் கூறுகின்றனர். உக்ரைன் மீது படையெடுப்பை தொடங்கிய பின்னர், விளாடிமிர் புடின் ...
நாட்டில் அன்றாட கோவிட் தொற்று எண்ணிக்கை 7000ஐ கடந்துள்ளது. இது கடந்த 7 மாதங்களுக்குப் பின்னர் புதிய உச்சம். இதனால் கோவிட் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையும் 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,830 பேருக்கு ...
ரம்ஜான் மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகத்தில் மற்ற ஊர்களுக்கு பயணிக்க 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தற்போது நிறைவடைந்த கிறிஸ்தவ பண்டிகையான புனித வெள்ளி வார இறுதிக்கு மக்கள் அதிக அளவில் பயணம் செய்வதை பார்க்கமுடிகிறது. ஆகையால், ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு மற்றும் ஏப்ரல் 22ம் தேதி ...
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கலாஷேத்ரா மாணவிகளிடம் மாநில மனித உரிமைகள் ஆணையம் இன்று விசாரணை நடத்துகிறது. பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் கூறிய குற்றச்சாட்டு தேசிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. பேராசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி மாணவிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரை அடையாறு மகளிர் போலீசார் ...
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக எழுந்த சர்ச்சை தொடர்பாக மனிதம் என்ற மனித உரிமைகள் அமைப்பின் உண்மை அறியும் குழுவினர் களஆய்வு மேற்கொண்டனர். அமைப்பின் மாநில நிர்வாகி வழக்கறிஞர் என். ராமர் தலைமையில், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம், அகில இந்திய வழக்கறிஞர் சங்க ...













