தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: நாளை முதல் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – சற்றுமுன் வெளியான அறிவிப்பு..!

ம்ஜான் மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகத்தில் மற்ற ஊர்களுக்கு பயணிக்க 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

தற்போது நிறைவடைந்த கிறிஸ்தவ பண்டிகையான புனித வெள்ளி வார இறுதிக்கு மக்கள் அதிக அளவில் பயணம் செய்வதை பார்க்கமுடிகிறது.

ஆகையால், ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு மற்றும் ஏப்ரல் 22ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்க போக்குவரத்துத்துறை முடிவுசெய்துள்ளது.

விடுமுறைக் காலங்களில் மக்கள் பேருந்து நிலையங்களில் கூட்டம் கூட்டமாக வாகனங்களுக்கு அலைமோதுவதை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ஏப்ரல் 13ம் தேதி 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதேபோல், ரம்ஜானை முன்னிட்டு ஏப்ரல் 21ம் தேதி சென்னையில் இருந்து 500 பஸ்கள் இயக்கப்படும்.

தமிழகத்தில் விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோயம்புத்தூர் மற்றும் மதுரைக்கு இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.