ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் விசாரணைக்காக அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. விசாரணை குழுவின் அமுதா ஐஏஎஸ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட நிலையில் கடந்த ...
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம். அண்ணாமலை பொறுப்பேற்று 1 வருடம் 7 மாதம் ஆகியுள்ளது. பல்வேறு ஊர்களில் பல்வேறு விதமான நிகழ்வுகளின் பங்கேற்றாலும் அவர் சுற்றுப்பயணம் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த மாதம் திமுகவின் மூத்த தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்கள் சொத்து பட்டியலை ...
தொண்டாமுத்தூர்:பூண்டி, வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் உயிரிழந்தார். கடந்த மூன்று மாதங்களில், இதுவரை, 6 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.திருவண்ணாமலையை சேர்ந்தவர் லேகேஷ்,37. இவர், கோவை நீலாம்பூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 5ம் தேதி இரவு, பூண்டி, வெள்ளியங்கிரி மலை ஏறியுள்ளார்.நேற்றுமுன்தினம், ஆறாவது மலையில் ஏறிக்கொண்டிருக்கும்போது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். ...
லால் சலாம் படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தின் பெயர் ‘மொய்தீன் பாய்’ என படக்குழு அறிவித்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ஆம் ஆண்டு தனது இணையரான நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படமும், படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடலும் இந்திய அளவில் பிரபலமானதோடு, மாபெரும் ...
ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், எல்பின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.14,168 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மோசடி நிதி நிறுவன நிர்வாகிகள், முகவர்கள் உட்பட 45 பேரைக் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஆருத்ரா என்ற நிதி நிறுவனம், 1,09,285 ...
கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் 10-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் மொத்தம் 5 கோடியே 30 லட்சத்து 85 ஆயிரத்து 566 பேர் வாக்களிக்க உள்ளனர். 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் மக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு ...
பிளஸ் 2 தேர்வு ரிசல்ட்!! சிறைவாசிகள் 87.78 சதவீதமும், மாற்றுத்திறனாளிகள் 89.20 சதவீதமும் தேர்ச்சி.!!
சென்னை: பிளஸ் 2 தேர்வில் சிறைவாசிகள் 87.78 சதவீதமும், மாற்றுத்திறனாளிகள் 89.20 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 7,55,451. தேர்ச்சி சதவீதம் 94.03%. மாணவியர்களின் தேர்ச்சி எண்ணிக்கை 4,05,753. தேர்ச்சி சதவீதம் 96.38. மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை 3,49,697. தேர்ச்சி சதவீதம் ...
எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான பழனிசாமி வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான பழனிசாமி எடப்பாடி பழனிசாமி கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு ...
சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது .. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வடக்கு தமிழ்நாட்டு கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியது. ...
கோவை காந்திபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் உடல் கருகிய நிலையில் பெண்ணின் உடல் இருப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் . இது குறித்து கொலையாக இருக்க கூடும் என சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை ...













