அலர்ட்!! மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் வீசும் சூறாவளிக் காற்று… இடி மின்னலுடன் கூடிய கனமழை..!

சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில் வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது ‌..

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌, “வடக்கு தமிழ்நாட்டு கடலோர பகுதிகளின்‌ மேல்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியது. இதன்‌ காரணமாக அப்பகுதிகளில்‌ இன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்‌கூடும்‌.இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு திசையில்‌ நகர்ந்து மத்திய வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ புயலாக வலுப்பெறக்‌ கூடும்‌.

இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளின்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌. நகரின்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்‌ கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்‌. இன்று முதல் வரும் 10-ம்‌ தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய வட தமிழ்நாட்டின்‌ கடலோர பகுதிகள்‌, இலங்கை கடலோர பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌, இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்‌ கூடும்‌.