நெல்லை ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மீது மேலும் ஒரு வழக்கு..!

பிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லையில் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் விசாரணைக்காக அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.

விசாரணை குழுவின் அமுதா ஐஏஎஸ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 10 மற்றும் 17ஆம் தேதிகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

உயர்மட்ட குழு விசாரணை குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து 17 வயது சிறுவனின் பற்கள் பிடுங்கப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது .அத்துடன் பல்வீர் சிங் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நெல்லையில் குற்றவாளிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது ஏற்கனவே மூன்று வழக்குகள் உள்ள நிலையில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜமீன் சிங்கப்பட்டியை சேர்ந்த சூர்யா அளித்த புகாரில் கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, காவல் உதவி ஆய்வாளர் ராமலிங்கம், சிறப்பு உதவி ஆய்வாளர் ஜோசப் மீதும் வழக்குப்பதியப்பட்டுள்ளது.