கோவை சூலூர் பக்கம் உள்ள பட்டணம் ,அம்மன் நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 52) பாத்திர வியாபாரம் செய்து வந்தார் .இவர் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது மனைவியின் சேலையை விட்டதில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்தும் ...

கோவை அருகே உள்ள கவுண்டம்பாளையம், மீனாட்சி நகர், உடையார் வீதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மனைவி தனம்மாள்( வயது 75) இவரது படுக்கையின் அருகே கொசுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது. அது படுக்கையில் தவறி விழுந்து மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்தது .இதில் தனம்மாள் உடல் முழுவதும் கருகியது .அவர் அதே இடத்தில் உடல் கருகி இறந்தார் .இது ...

கோவை அவினாசி ரோடு மிக முக்கியமான சாலையாகும். இந்த சாலையில் ஏராளமான கல்லூரிகள், ஓட்டல்கள், நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் இந்த சாலையில் எப்போது போக்குவரத்து அதிகமாக காணப்படும். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டே கடந்த பல வருடம் முன்பு ஆறு வழி சாலையாக மாற்றப்பட்டது. இருந்த போதும் ...

கோவை துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையம், சுப்ரமணியம் பாளையம் கவுண்டம்பாளையம், தொப்பம்பட்டி, வெள்ளக்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவம் நடந்து வந்தது. இது குறிதது துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.கொள்ளையர்களைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் துடியலூர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது ...

கோவை அருகே உள்ள கணபதி மாநகர சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் கார்த்திக் ( வயது 28) கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் நிர்வாக மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று ஈரோடு செல்வதற்காக கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார் .அப்போது அங்கு வந்த 3பேர் இவரிடம் இருந்து 1550 ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவையில் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 2 கொலை சம்பவங்கள் நடந்தன .இந்த சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து கோவை மாநகரில் ரவுடிகளின் நடவடிக்கைகளை ஒடுக்கும் பல்வேறு ...

கோவை வடவள்ளி அருகே உள்ள பொம்மணாம்பாளையத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் . கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி ( வயது 42) இவர்களுக்கு திருமணம் ஆகி 25 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். செல்வி குடிப்பழக்கம் உடையவர் .இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வாழ்க்கையில் ...

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர்த் திருவிழா வருகிற 1-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி கடந்த ஜனவரி மாதம் தேருக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டு திருவிழா தொடங்கியது. பூச்சாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக பூஜைகள் செய்யப்பட்ட கம்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் வளாகத்தில் நடப்பட்டது. பின்னர் இதற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்கள் ...

விழுப்புரம் அருகே ஆதரவற்ற பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம். 2 இடங்களில் செயல்பட்ட அன்புஜோதி ஆசிரமத்தை மூடி சீல் வைப்பு. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் உள்ளது. இதனை கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜுபின்பேபி (வயது 45) என்பவர் நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்,ஆதரவற்றோர் ...

டெல்லி : கடந்த பிப்ரவரி 6ம் தேதி துருக்கியை தாக்கிய நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக உலகின் பல்வேறு நாடுகளிலும் நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன. கடந்த 4 நாட்களில் உலகின் பல்வேறு நாடுகளிலும் சங்கிலி தொடர் போல நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன. கடந்த பிப்ரவரி 14ம் ...