கோவை துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையம், சுப்ரமணியம் பாளையம் கவுண்டம்பாளையம், தொப்பம்பட்டி, வெள்ளக்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவம் நடந்து வந்தது. இது குறிதது துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.கொள்ளையர்களைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் துடியலூர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். இவர்கள்தான் இந்த தொடர் திருட்டை நடத்தினர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 3பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் கோவில் பாளையம் கீரணத்தம் ,கல்லுகுழியைச் சேர்ந்த சுப்ரமணி என்ற திவான் (வயது 20) நடராஜன் (வயது 55) தூத்துக்குடி மாவட்டம் கருங்குடலை சேர்ந்த முத்துக்குமார் (வயது 31) என்பது தெரிய வந்தது. இவர்களிடமிருந்து 34 பவுன் தங்க நகைகள் மற்றும் பொருட்கள் மீட்க பட்டது. கொள்ளையர்களைப் பிடித்து தங்க நகைகளை மீட்ட தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பாராட்டினார்.
Leave a Reply