கோவை நட்சத்திர ஓட்டலில் தந்தை-மகனை சரமாரியாக தாக்கி வைரமோதிரம் பறிப்பு வழக்கில் பா.ஜ.க இளைஞர் அணி செயலாளர் கைது..!!

கோவை சரவணம்பட்டி , ரெவீன்யூ நகரை சேர்ந்தவர் ஜான்சன் ( வயது 50)இவர் பாஜக சிறுபான்மை பிரிவு கோவை மாவட்ட தலைவராக உள்ளார்.கடந்த மாதம் 10-ந்தேதி இவர் தனது மகன் டேவிட் பிறந்தநாளுக்காக கோவை ரேஸ்கோர்சில் கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார்.அங்கு நடந்த ஜோடிகள் நடன நிகழ்ச்சியை பார்க்க ரூ2,500 பணம் கட்டினார்.அப்போது அங்கிருந்த கணக்காளர் விஷ்ணு பாரதி ஜோடியாக வருபவர்கள் மட்டும் இதில் பங்கு கொள்ள முடியும். என்று கூறி அனுமதி மறுத்தார்.இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கைகலப்பு நடந்தது. இதில் ஆத்திரமடைந்த விஷ்ணு பாரதி மற்றும் அங்கு தங்கி இருந்த ஓட்டல் பவுன்சர்கள் சேர்ந்து ஜான்சனையும் அவரது மகன் டேவிட்டையும் சரமரியாக தாக்கினார்கள்.இதில் ஜான்சன் மகன் டேவிட் பல் உடைந்தது. அவர் அணிந்திருந்த வைர மோதிரம் கொள்ளையடிக்க பட்டது.அதன் மதிப்பு ௹ 3. லட்சம் இருக்கும்.டேவிட் படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்..பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் ஜான்சன் ஒட்டலில் தாக்கப்பட்ட சம்பவம் வீடியோவில் வைரலாக பரவியது.இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ரேஸ் கோர்ஸ் போலீஸ்இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி திருப்பூர் எஸ். ஆர். வி. கார்டனைச் சேர்ந்த ஒட்டல் கணக்காளர் விஷ்ணு பாரதி ஓட்டல் பவுன்சர்கள் ரெயின்போ ரமேஷ், பில்லா ரமேஷ, ரஞ்சித், சுதர்சன், முகமது அப்ரிதீன் ஆகியோர்மீது கொலை முயற்சி, வழிப்பறி, தாக்குதல்,உட்பட 5பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்..இந்த நிலையில் இதில் தேடப்பட்டு ரெயின்போ ரமேஷ் நேற்று கைது செய்யப்பட்டார்.இவர் கோவை மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் ஆவார்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.