நீலகிரி உயிர் சுழல் காப்பகத்தின் நீடித்த நிலைத்த தன்மைக்கு புலிகள் அவசியம் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

நீலகிரி மாவட்டத்தில் சர்வதேச புலிகள் தினத்தினை முன்னிட்டு தேசிய பசுமை படை, உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில் புலிகள் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் நீலகிரி உயிர்ச்சூழல் காப்பகத்தின் அறிமுக புத்தகத்தினை மாணவர்களுக்கு வழங்கி தலைமை தாங்கி பேசுகையில் மாணவர்கள் அறிவியல் அறிவினை மேம்படுத்துவது அவசியம்.புலிகள் தங்கள் வாழ்நாளில் வன பகுதியின் பல்லுயிர் தன்மை பாதுகாப்பதில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது.முதுமலை புலிகள் காப்பகம் உலகின் சிறந்த வனமாக தொடர்வதற்கு உணவு சங்கிலியின் முதல் நிலையில் இருக்கும் புலிகள் தான் காரணம் என்றார்.
தேசிய பசுமை படை குன்னூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசுகையில், 1972 ஆம் ஆண்டு இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் புலிகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டது. புலிகளின் வேட்டையாடப்படுவதும் மற்றும் புலியின் உடல் பாகங்கள் வியாபாரம் நடத்துவதையும் தடை செய்யத் திட்டம் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. உலகில் காணப்பட்ட 9 வகையான புலிகளில் மூன்று வகையான புலிகள் அழிந்துவிட்டன மிஞ்சி இருக்கக்கூடிய ஆறு வகையான புலி கள் அழியும் தருவாயில் உள்ளது. இதற்கான முக்கிய காரணமாக மக்கள் பெருக்கம் வன ப்பகுதிகளில் அதிக அழுத்தம் கொடுத்தல், அந்நிய நாட்டு தாவரங்கள், மனித விலங்கு போராட்டம்,வேட்டையாடுதல், போன்ற காரணங்கள் புலிகள் பாதுகாப்பில் முக்கிய சவாலாக உள்ளது.
தாவர இனங்களும் விலங்கினங்களையும் பாதுகாப்பதற்கு புலிகள் அவசியமாக உள்ளது .புலிகள் வன ங்களின் நீடித்த நிலைத் தன்மைக்கு முக்கிய காரணமாக உள்ளது .எனவே புலிகள் வனங்களில் இருப்பது விவசாயம், மக்களின் பொருளாதார வாழ்க்கைக்கும் வலிமையான எதிர்காலத்திற்கும் அவசியம். புலிகளை குறித்த சிறிய சிறிய ஆய்வு கட்டுரைகள் மாணவர்கள் எழுதுவது அவசியம் என்று குறிப்பிட்டார். ஆசிரியர் ஜெயசித்ரா இயற்கையை பாதுகாப்பது வீட்டிலிருந்தே மாணவர்கள் தொடங்க வேண்டும் என்றார். ஒன்பதாவது வகுப்பு மாணவன் வாசிம் குறிப்பிடும் போது வயதான புலிகள் உணவு தேட முடியாத சூழ்நிலையில் தான் மனிதனை தாக்குகிறது என்று குறிப்பிட்டார்.
மாணவி லிண்டா மிஸ்டிகா இயற்கை விவசாயம் வீட்டில் இருந்து தொடங்குவது அவசியம் இயற்கை பாதுகாப்பதை மாணவர்கள் முன்னெடுப்போம் என்று உறுதி அளித்தார். தேசிய பசுமை படையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை குன்னூர் கல்வி மாவட்ட தேசிய பசுமை படை செய்திருந்தது .இந்நிகழ்ச்சியில் பள்ளிஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்..