10 அடி ஆழ கழிவு நீர் குழியில் விழுந்த பசுமாடு..!

தருமபுரி அடுத்து அ.கொல்ல அள்ளி, மேல் கொட்டாய் மேடு பகுதியில் ராஜேந்திரன் என்பவர் பசுமாடு 10 அடி கொண்ட கழிவு நீர் குழியில் விழுந்துள்ளது. பசு மாடு உரிமையாளர் மேய்ச்சலுக்காக புல்கள் இருக்கும் இடத்தில் கட்டி வைத்திருந்தனர். அவ்விடத்தில் சிமெண்ட் ரிங் அமைக்கப்பட்டிருந்த சாக்கடை 10 அடி குழாய் ஒன்று இருந்துள்ளது. அந்த சாக்கடை கழிவு நீர் குழாய் மீது மூடி வைக்கப்பட்டிருந்த மூடி பழமையானதால் பசுமாடு அதன் மீது ஏறியதால் மூடி உடைந்து தவறி உள்ளே விழுந்துள்ளது. உடனே தீயணைப்பு மீட்பு பணித்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் தருமபுரி நிலையை அலுவலர் (போ) வெங்கடேஷ் அவர்கள் தலைமையில் அங்கு விரைந்து வந்து தீயணைப்பு மீட்பு பணி துறையினர் குழியில் விழுந்த பசுமாட்டினை அரை மணி நேரம் போராடி உயிருடன் மீட்டு மாட்டின் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.