அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காய்கறிகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு..!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு அன்றாட வாழ்வில் காய்கறிகளின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையியில்
தோட்டக்கலை உதவி இயக்குனர் சுபாஷினி, அறிவுரையின்படி
கிராம திட்டத்தின் கீழ் குழு அலோசகர் ‌ டாக்டர். செல்வராணி, மற்றும் பாட‌ஆசிரியர் டாக்டர். எஸ். விஜயகுமார் ஆகியோர் தலைமையில்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில்கலசலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை கல்லூரியை சேர்ந்த இறுதி ஆண்டு தோட்டக்கலை மாணவிகள் திம்மி, விஜிதா, ரேஷ்மா, ரருஷிதா, சாலினி,கிருத்திகா‌ ஸ்ரீ ஆகியோர்கள் விவசாயிகளுக்கு விதைகள் வழங்கி , தோட்டம் அமைக்க செய்முறை பயிற்சி அளித்தனர்.

இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜகோபாலன் , வேளாண்மை ஆசிரியர் கண்ணன், வேளாண்மை பயிற்சி ஆசிரியர் குறள் அமுதன், மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் வைகுண்ட சாமி, பள்ளி மாணவ மாணவிகள் விவசாயிகள் உடனிருந்தனர்..