கார்கில் போர் நினைவு தினம்… தென்காசி பட்டாளம் இராணுவ வீரர்கள் நலசங்கம் சார்பில் வீரவணக்கம்..!

தென்காசி  மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையம் அருகே 24 – ம் ஆண்டு கார்கில் போர்  நினைவு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் பட்டாளம் இராணுவ வீரர்கள் நலசங்கம் சார்பில்  தலைவர் கேப்டன் ராம்குமார் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன், தலைமை காவலர்
முருகன், கொளரவ தலைவர் சுவேதார் மேஜர் என். ராம சுப்பிரமணியம்,
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

1999- ம் ஆண்டு கார்கில் போரில் இந்தியாவில் 543 இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையிலும் உயிரோடு இருக்கும் கார்கில் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த வெற்றி தினத்தில் முன்னாள் இராணுவ வீரர்கள், செயலாளர் முருகன், பொருளாளர் சங்கர், ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி, சமுக ஆர்வலர் செல்வராணி, பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்கள்  கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி கார்கில் போரில் வீர மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கு
வீரவணக்கம் செலுத்தினர்கள்.