அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் வீடு, கரூர், கோவை உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை !!! கரூர் – கோவை சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீடு, செங்குந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனம், சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள கிரானைட் தொழிற் சாலை, கோவை ...
கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் அருகே அண்ணா சிலை எதிர்ப்புறம் மத்திய சிறை சுற்று சுவரை ஒட்டி 10 பெட்டி கடைகள் செயல்பட்டு வந்தது. இதில் செருப்பு கடைகள் டீக்கடைகள் இயங்கி வந்தது. இந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் புல்டோசர் மூலம் இன்று அகற்றினார்கள். இதில் உடல் ஊனமுற்ற முத்துசாமி விமலா ஆகியோருக்கு மாநகராட்சி ...
கோவை பீளமேடு ஆவராம்பாளையம் ரோட்டில் உள்ள ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி உமா( வயது 37 )இவர் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித், திவ்யா ஆகாஷ், ஆகியோரிடம் கடந்த 3 ஆண்டுகளாக பல தவணைகளில் ரூ.13 லட்சத்து 52 ஆயிரம் வட்டிக்கு வாங்கி இருந்தார். இந்த பணத்துக்கு வட்டியுடன் சேர்த்து ரூ. 18 லட்சத்து ...
சிவகங்கை: என் மண் என் மக்கள் என்ற முழக்கத்தோடு பாதயாத்திரை நடத்தி வரும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இஸ்லாமிய இளைஞர் ஒருவர் திருக் குர் ஆனை பரிசளித்தார். கடந்த 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பாதயாத்திரை தொடங்கிய அண்ணாமலை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கியவாறு நடைபயணத்தை முடித்துக் கொண்டு, தற்போது சிவகங்கை மாவட்டத்தில் ...
கோவை- அவிநாசி ரோட்டில் உள்ள நீலாம்பூர் பி. எஸ். ஜி. பவுண்டரி அருகே நேற்று ரோட்டை கடந்த ஒருவர் மீது அந்த வழியாக.வேகமாக வந்த கார் மோதியது .இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது .அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கம் உள்ள மோள காளிபாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் விவசாயி..இவரது மனைவி லட்சுமி (வயது 51 ) இவர் கடந்த சில மாதங்களாக நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்,.இந்த நிலையில் நேற்று இவர் சர்க்கரை கலந்த டீ குடித்தாராம் .இதை இவரது மகன் கண்டித்தார்.இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி அங்குள்ள தோட்டத்து கிணற்றில் குதித்து தற்கொலை ...
கோவை எஸ்.எஸ்.குளம் அருகே உள்ள அத்திப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிதாஸ் ( வயது 23) பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் காதல் ஏற்பட்டது ..அதைத் தொடர்ந்து ஹரிதாஸ் சிறுமியை ஆசை வார்த்தை காட்டி கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார் .இதையடுத்து அவர் சிறுமியை ...
கோவை துடியலூர் அருகே உள்ள இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது மாணவி.இவரது சித்தப்பா திருஞானம் (வயது 42)அதே பகுதியில் வசித்து வருகிறார்.இவர் அந்த சிறுமியுடன் செல்போனில் ஆபாச படங்களை காட்டி பல தடவை சில்மிஷம் செய்துள்ளாராம். பள்ளிக்கூடத்தில் இந்த மாணவிக்கு இது பற்றிய விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு அவர் இது பற்றி ...
கோவை சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-ஆன்லைன் மூலம் புது ,புது முறைகளை கையாண்டு மோசடிகளை மர்ம கும்ப கும்பல் அரங்கேற்றி வருகிறது. அவர்கள் “பெடக்ஸ் இன்டர்நேஷனல்” கொரியர் மூலம் பொருட்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யும் தொழில் அதிபர்களின் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை தேடி கண்டறிகிறார்கள் .அதில் சில தொழில் அதிபர்களை ...
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி அதிகாலையில் ஒரு கார் வெடித்து சிதறியது இதில் காரில் இருந்த உக்கடம் பகுதியில் சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் அதே இடத்தில் உயிரிழந்தார்.கோவிலின் முன் பகுதி சேதமடைந்தது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது .ஜமேஷா ...












