கோவை சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன்,சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் நேற்று மேட்டுப்பாளையம் ரோடு எம்ஜிஆர் மார்க்கெட் பின்புறம் சுற்றி வந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்து கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 1200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன . இது தொடர்பாக திருவாரூர் ...

கோவை ஆவாரம்பாளையம் ரேஷன் கடை வீதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் விக்னேஷ் ( வயது 30) அந்த பகுதியில் உள்ள ஒரு பவுண்டரியில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலையில் இவர் வேலை முடிந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ரேஷன் கடை அருகே நின்று கொண்டிருந்த 2 பேர் ...

கோவை: இன்று ஆடி மாதம் 18 வது தினம். ஆடி பெருக்கு நாளாகிய இன்று நகை வாங்கினால் நகை பெருகும் என்ற ஐதீகம் உள்ளது. இதையடுத்து கோவை பெரிய கடை வீதி, ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, காந்திபுரம் கிராஸ் கட் ரோடு, 100 அடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் காலையில் இருந்தே மக்கள் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 டன் எடையுள்ள காய்கறிகள் எரிந்து சேதமடைந்தது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நஞ்சப்ப கவுண்டன் புதூர் பகுதியில் வசிக்கும் துரைசாமி என்பவர் பிரபல தனியார் நிறுவனத்திற்கு தனது  குடோனை வாடகைக்கு விட்டுள்ளார். அந்த தனியார் நிறுவனம் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்முதல் செய்யும்  வாழைக்காய், ...

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு சம்பந்தமாக அவருக்கு சொந்தமான இடங்கள், அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி கோவையில் ராமநாதபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் சூப்ரவைசராக உள்ள முத்துபாலன் என்பவரது வீட்டில் ...

கரூர் – கோவை சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீடு, செங்குந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனம், சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள கிரானைட் தொழிற் சாலை, கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் சூப்ரவைசர் முத்துபாலன் இல்லம் மற்றும் கோவை – திருச்சி சாலையில் உள்ள அருண் ...

ஆடி மாதத்தில் வரும் மிக முக்கிய நாட்களில் ஒன்று ஆடிப் பெருக்கு. இந்த நாளில் எந்த ஒரு சுப காரியத்தை தொடங்கினாலும் அது பெருகி வரும் என்றும், எந்த பொருள் வாங்கினாலும் அது பல மடங்காக பெருகும் என்பது ஐதீகம். மேலும் இந்த நாளில் நீர் நிலைகள் பெருக வேண்டும், தண்ணீர் பஞ்சம், உணவு பஞ்சம் ...

பழமையும் பெருமையும் நிறைந்த நம் தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு. மதுரை மல்லி, திருநெல்வேலி ஆல்வா, திண்டுக்கல் பூட்டு! இதே போல ஒவ்வொரு ஊருக்கும் தனித்தனி அடையாளம் உண்டு! அந்த அடையாளங்களுக்கு பெருமையும், அங்கீகாரமும் சேர்க்கும் வகையில் மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி கௌரவிக்கிறது! அந்த வகையில் நம் தமிழ்நாட்டின் ...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே உள்ள நொய்யல் ஆற்றங்கரையில் அம்மாவாசை ஆடி 18 போன்ற நாட்களில் முன்னோர்களை நினைவாக திதி நடக்கும் வழக்கம் போல இந்த ஆண்டு நொய்யல் ஆற்றங்கரையில் படித்துறையில் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சியில் போதுமான அடிப்படை வசதிகளை இந்து சமய அறநிலைத்துறை செய்து ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அருகே கரும்புத் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கரும்பு பயிர்கள் எரிந்து நாசமானது. பவானிசாகர் அருகே உள்ள பகுத்தம்பாளையம் வடக்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(47). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். இவரது தோட்டத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் ...