இன்று ஆடிபெருக்கு.. கோவை நகை கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்..!!

கோவை: இன்று ஆடி மாதம் 18 வது தினம். ஆடி பெருக்கு நாளாகிய இன்று நகை வாங்கினால் நகை பெருகும் என்ற ஐதீகம் உள்ளது. இதையடுத்து கோவை பெரிய கடை வீதி, ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, காந்திபுரம் கிராஸ் கட் ரோடு, 100 அடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் காலையில் இருந்தே மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது. இதையொட்டி அனைத்து நகை கடைகளுக்கு முன் போலீஸ் பட்ரோல் வாகனம் ரோந்து சுற்றி வருகிறது.சாதாரண உடையணிந்த போலீசாரும் கண்காணித்து வருகிறார்கள்.நகை விற்பனை குறித்து கோவை கிராஸ் கட் ரோட்டில் உள்ள நகைக்கடை அதிபர் லிஜோ சுங்கத் கூறியதாவது:-ஆடிப்பெருக்கு தினமாகிய இன்று காலையிலிருந்து மக்கள் நகை வாங்க வந்த வண்ணம் உள்ளனர்.பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப எல்லா விலைகளிலும் எங்களிடம் தரமான நகைகள் உள்ளது.நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ .5,510 ஆக இருந்தது.. இன்று விலை குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை 5,495 ஆக உள்ளது.பொதுமக்கள் பாதுகாப்புடன் நகைகள் வாங்கி செல்கிறார்கள் இவ்வாறு அவர் கூறினார்.ஆடி 18 தினத்தை ஒட்டி கோவையில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.