கோவை ஆர். எஸ். புரம் கென்னடி தியேட்டர் வளாகத்தில் பால் பண்ணை நடத்தி வருபவர் ஜனார்த்தனன் என்பவர் மனைவி அபிநயா. பிரபல பால்பண்ணை உரிமையாளரான அபிநயாவிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு கோவை ஆர் எஸ் புரத்தில் உள்ள கென்னடி தியேட்டர் வளாகத்திற்கு சொந்தக்காரர் என்று கூறி மணிகண்டன் மற்றும் அவரது மனைவி பாரதி ஆகியோர் ...

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது இந்தியாவிற்கு மிகப் பெரிய பின்னடைவு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பாஜக கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் உள்ள உலக புகழ்பெற்ற பேராலயங்களில் ஒன்றான பனிமய மாதா பேராலயத்திற்கு சென்றார். ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் பேனர் சரிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் சாலையோரம் பெரிய விளம்பர பலகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று இந்த விளம்பரப் பலகை விழுந்ததில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் யார் என்பது பற்றி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். அதில், ...

தமிழ்நாட்டில் உள்ள கோவில் திருவிழாக்களில் காலம் காலமாக கலாச்சார ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆடல் பாடல் நிகழ்ச்சியில் நடத்தப்படுவதால் சில இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் காவல்துறையினர் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்குவதை தவிர்த்து வந்தனர். இதனால் கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க ...

சேலம், சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் சதீஷ்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வந்தது. இதில், சதிஷ் உட்பட 9 பேர் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில், யுவராஜ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.. சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் என்ற பொறியியல் மாணவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆணவகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு, மதுரை ...

கர்நாடகா மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானங்கள் வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அப்போது ஒரு விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இதிலிருந்த விமானிகள் பாராசூட் உதவியுடன் உயிர் தப்பியுள்ளது. பின்னர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் அங்கிருந்த பொதுமக்களை அப்புறப்படுத்தினர். இந்த விமானத்தில் எப்படி ...

கோவை அருகே உள்ள அரசூரை சேர்ந்தவர் சிங்காரம். இவர் ஆன்லைன் மூலம் வேலை தேடி வந்தார் .அப்போது ஒரு டெலிகிராம் ஐ.டி. மூலம் வந்த ஒரு லிங்கில் தொடர்பு கொண்டார். அதில் சில போட்டிகளில் கலந்து கொண்டு சிறிய தொகையை சிங்காரம் பெற்றார். இதனால் ஆசை அடைந்த சிங்காரம் மேலும் முதலீடு செய்ய ஆரம்பித்தார் .மொத்தம் ...

கோவை பீளமேட்டில் உள்ள ஒரு உள்ள தனியார் கலை- அறிவியல் கல்லூரி பெண்கள் விடுதியில் உள்ள ஒரு அறையில் யாரோ புகுந்து செல்போனை திருடி சென்று விட்டனர். இது குறித்து காவலாளி செந்தில்குமார் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த முகமத் பைசல் (வயது 20) என்பவரை ...

கோவை : தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை தலைவர் காமினி பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 25.-ந்தேதி கோவை, செல்வபுரம் -பைபாஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் ...