பெண்களுக்கு மாதம் ரூ.1000… நிராகரிக்கப்பட்டாலும் பணம் பெறலாம்- வெளியானது புதிய அறிவிப்பு..!

பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்து தீர்வு பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.அதன்படி தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டன. அதன்மூலம் இதுவரை ஒரு கோடியே 64 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் ஏற்கெனவே உள்ள தரவுகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு வருகின்றன. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் இந்த அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு விண்ணப்பதாரர்களை இறுதி செய்ய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர் விண்ணப்பங்களின் நிலை குறித்து சம்பந்தப்பட்ட மகளிரின் கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பி வைக்கப்படும்.

இந்தநிலையில் மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டதாக மெசேஜ் வந்தாலும், விண்ணப்பதாரர்கள் இதுகுறித்து மாவட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்து தீர்வு பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த திட்டம் தொடங்கும் வரும் 15ஆம் தேதிமுதல் அடுத்த 5 நாட்களில் அதாவது செப்டம்பர் 20ம் தேதிக்குள் முதல் உரிமைத் தொகை சம்பந்தப்பட்ட பெண்ணின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.