ஒர்க்ஷாப்பில் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் சாவு ..

கோவை அருகே ஒர்க்ஷாப்பில் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் சாவு .. கோவை அருகில் உள்ள மலுமிச்சம்பட்டியில்ஒரு ஒர்க் ஷாப்பில்டேங்கர் லாரியில் வெல்டிங் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டேங்கர் வெடித்து சிதறியது இதில் உத்தரபிரதேசச் சேர்ந்த தொழிலாளி ஒகில் (வயது 38) அதே இடத்தில் இறந்தார். ரவி(வயது 19) என்பவர் படுகாயம் அடைந்தார் இவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.டேங்கரில் வேதியப் பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டதால் வெல்டிங் செய்யும் போது இந்த வெ
டி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.படுகாயம் அடைந்த ரவி சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் .அங்கு சிகிச்சை அளித்து பலன்அளிக்காமல் நேற்று இறந்தார் .இதனால் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் சாவு எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..