சென்னை: சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை பட்டினிப் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு தனியார் பள்ளிகள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கை: சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் பல்வேறு ஆசிரியர்கள் ...
பீகாரில் நடத்தப்பட்டது போன்று தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. பீகாரில் ஆளும் ஜேடியூ- ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. 90 ஆண்டுகளில் நாட்டில் நடத்தப்பட்ட முதல் சாதிவாரி கணக்கெடுப்பு இதுவாகும். இதற்கு எதிராகவும் வழக்குகள் தொடரப்பட்டன. இதில் சாதக, பாதகமான தீர்ப்புகள் வந்தன. ...
மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்தத சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் நாந்தெட் மாவட்டத்தில் சங்கர்ரோ சவான் என்ற அரசு மருத்துவமனை உள்ளது. இந்த அரசு மருத்துவமனையில் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் பலரும் சிகிச்சை ...
பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்தை, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்று மத்திய அரசு “தூய்மை பாரதம் எனும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தூய்மை பாரத திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அனைவரும் காலை 10 மணி முதல் 11 மணி வரையில் தங்கள் ...
சேலம்: பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது ஒட்டு மொத்த தொண்டர்களின் முடிவு என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். சேலத்தில் நேற்று நடைபெற்ற சூரமங்கலம் பகுதி அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியை விட்டுச் சென்றபோது, ரூ 2.23 லட்சம் ...
வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் 19 அடி உயர அம்பேத்கர் சிலை வரும் அக்.14 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. மேரிலேண்ட் மாகாணத்தின் அக்கோகீக் நகரத்தில் அம்பேத்கர் சர்வதேச மையத்துக்கு (ஏஐசி) சொந்தமான 13 ஏக்கர் நிலத்தில் இந்தச் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய சர்தார் வல்லபாய் படேல் சிலையை உருவாக்கிய புகழ்பெற்ற ...
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, தொடா்ந்து பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கடலில் புனித நீராடி கோயிலில் தரிசனம் செய்தனா். பொது தரிசனம், ரூ. 100 கட்டணப்பாதையில் பல மணி நேரம் காத்திருந்ததால் திருக்கோயில் வளாகம் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ரூ.100 கட்டணப்பாதையானது ...
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மாயாகுளம் ஊராட்சி முத்துராஜ் நகரில் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாயா குளம் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி பாக்கியநாதன் தலைமையில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சக்தி கணேஷ் செயலர் ஜெயபால் முன்னிலையில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்ந்த கிராம சபை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக ...
கோவை மருதமலை அருகே உள்ள ஐ.ஓ.பி காலனி சேர்ந்தவர் மனோகரன், இவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவர் வடவள்ளியில் தனது வீட்டைஅவரது மகன் பாரதிக்கு செட்டில்மெண்ட் பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளார். இதையடுத்து அவர் அந்த வீட்டின் பட்டா மாறுதலுக்காக இ சேவை மையத்தில் கடந்த 19ஆம் தேதி விண்ணப்பித்தார். இதையடுத்து கடந்த 20-ந்தேதி ...
கோவை குனியமுத்தூர் ,லவ்லி கார்டன், வசந்தம் சேர்ந்தவர் நசீர் இவரது மகன் நியாஸ் கமால் ( வயது 20) குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி. சி. ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று கோட்டைமேடு வின்சென்ட் ரோடு பகுதியில் நடந்து சென்றார்.அப்போது முன் விரோதம் காரணமாக இவரை அதே பகுதியை சேர்ந்த ...













