கோவை குனியமுத்தூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட புட்டுவிக்கி சாலையில் புதிதாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். இதில் கோவை தெற்கு பகுதி துணை போலீஸ் கமிஷனர் சண்முகம், உதவி போலீஸ் கமிஷனர் ரகுபதி ராஜா, ...

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையம அம்மன் காலனியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ரஞ்சித் குமார் (வயது 28 )கூலி தொழிலாளி. இவர் நேற்று அம்மன் காலணி ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த முரளி என்ற முஜி (வயது 36) இவரிடம் முன் விரோதம் காரணமாக தகராறு ...

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள சொக்கம்பாளையம், காந்தி காலனி சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 48)கூலி தொழிலாளி.நேற்று இவரது வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது இவரது காலில் பாம்பு கடித்தது. இவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து அன்னூர் போலீசில் புகார் செய்யப்பட்டது ...

கோவை மாவட்டம் கோமங்கலம் பக்கம் உள்ள கஞ்சம்பட்டி, நடுக்கல்பாளையத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. கூலிதொழிலாளி. அவரது மகன் லோகேஸ்வரன் ( வயது 23 )குடிப்பழக்கம் உடையவர். இவர் தனது தந்தையிடம் புதிதாக பைக் வாங்கித் தருமாறு கூறினாராம். அதற்கு அவரது தந்தை மறுத்தார். இதனால் அவர்களுக்குள் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த லோகேஸ்வரன் அவரது ...

கோவை வெரைட்டிஹால் ரோடு சிரியன் சர்ச் வீதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். கஞ்சா வியாபாரி. இவரை வெரைட்டிஹால் ரோடு போலீசார் கடந்த 13 -1 -20 19 அன்று சி.எம்.சி.காலனிக்கு செல்லும் வழியில் வைத்து கஞ்சா விற்றதாக கைது செய்தனர் .இவரிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா கைப்பற்றபட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறியதாவது:- கோவை மாவட்ட பகுதிகளில் விபத்துக்களை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .குறிப்பாக திருச்சி ரோடு சிந்தாமணி புதூரில் உள்ள சிக்னல், பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஈச்சனாரி பிரிவு சிக்னல்’ மலுமிச்சம்பட்டி சிக்னல், ஆகிய 3 சிக்னல்களில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. அங்கு போலீசார் ...

சென்னை : திமுகவை வீட்டுக்கு அனுப்பும் வரை போராட்டம் ஓயாது, தமிழ்நாட்டில் மக்கள் விரோத செயல்கள் தொடரும்பட்சத்தில் திமுக அரசுக்கு எதிரான அதிமுகவின் போராட்டங்கள் தொடரும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, விஷச்சாராய மரண ...

கர்நாடக மாநிலம் மைசூருவில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. நரசிங்கபுரத்தில் இன்னோவா கார், பேருந்து நேருக்கு நேர் மோதி கொண்டதில் இரண்டு குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். இன்னோவா காரில் இருந்து ஒருவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில், மோசமாக சேதம் அடைந்த காரில், உயிரிழந்த பயணிகளை  சம்பவ இடத்தில் ...

சென்னை புரசைவாக்கம் ரித்தர்டன் சாலை சர்ச் லைன் பகுதியைச் சேர்ந்தவர் பவுன்குமார் (வயது 35). ஆடிட்டரான இவர் புதிய தொழில் தொடங்கும் ஆர்வத்தில் இருந்து வந்தார். அதற்காக பணம் முதலீடு செய்யவும் தயாராக இருந்தார். இதனை அறிந்துகொண்டு அவரிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த சங்கர்பாபு, திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்த ...

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உட்பட 4 மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், “தமிழ்நாட்டில் தற்போது கிட்டத்தட்ட மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்ற நிலையில், இதில் பெரும்பாலான மருத்துவக் கல்லூரிகள் அனைத்திந்திய அண்ணா ...