இன்னும் 2 ஆண்டுகளில் புதிதாக 50,000 பேருக்கு அரசு பணி – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றோருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

அதன்படி, டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 10,205 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். 2022 ஜூன் மாதம் நடந்த டிஎன்பிஎஸ்சி குருப் தேர்வில் 10,205 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். தேர்ச்சி பெற்ற 10,205 பேர் பல்வேறு அரசுத்துறைகளில் இளநிலை பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதன்பின் அவ்விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், அரசு வேலைக்கு உள்ள மதிப்பு எப்போதும் குறையாது என தெரிவித்தார். முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையில், தன்னலம் கருதாமல் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஏரளாமானோர் உள்ளனர். மக்கள் சேவையை லட்சியமாக கொண்டு ஊழியர்கள் செயல்பட வேண்டும். அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் பணியை, எந்த குறையும் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும். ஒருவருக்கு அரசு வேலை கிடைத்தால் அது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பலன் அளிக்கும்.

எனவே, முழு ஈடுபாட்டுடன் அரசு ஊழியர்கள் தங்கள் பணிகளை செய்ய வேண்டும். அரசு பணிக்கு தேர்வாகி இருப்பவர்களுக்கு மக்கள் சேவை ஒன்றுதான் லட்சியமாக இருக்க வேண்டும். எப்படியாவது அரசு பனி வாங்கிவிட வேண்டும் என்று இளைஞர்களின் கனவாக இருக்கிறது. அரசு எந்திரம் நந்தடராக செயல்பட வேண்டுமெனில் அரசு அலுவலர்கள் நன்றாக செயல்பட வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

உடல் உறுப்பு தானம் செய்து, அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்ட முதல் நபர் அரசு ஊழியர். உடல் உறுப்பு தானம் செய்த தேனியை சேர்ந்த அரசு ஊழியருக்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதல்வர், ஆசிரியர் தேர்வை வெளிப்படையாக நடத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளை விரைவாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி விடைத்தாள்களை விரைவாக திருத்த உயர் தொழில்நுட்ப வசதி பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வருகிறோம். தமிழக இளைஞர்களுக்கு அரசு பணி தேர்வுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. குடிமைப்பணி தேர்வுகளில் அதிகளவில் தமிழக மாணவர்கள் தேர்வாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 13 லட்சம் இளைஞர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, என்னுடைய பிரதிநிதியாக இருந்து மக்கள் சேவைகளை நிறைவேற்றுங்கள் என பணிநியமன ஆணைகள் பெற்றவர்களுக்கு அறிவுறுத்தினார். முதலமைச்சராக இருந்து மட்டுமல்ல, தந்தை நிலையில் இருந்தும் வாழ்த்துகிறேன். எனக்கு கிடைக்கும் நல்ல பெயரும், கெட்ட பெயரும் அரசு அதிகாரிகளாகிய உங்கள் மூலமாகத்தான் வரும். அரசு இயந்திரம் சிறப்பாக செயல்படுகிறது.

அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உங்களை சந்திக்க வருபவர்களை உட்கார வைத்து குறைகளை கேளுங்க, அப்படி செய்தாலே பாதி குறை தீர்ந்துவிடும் என்றார். நடப்பாண்டில் மேலும் 17,000 பேர் அரசுப்பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். அடுத்த இரு ஆண்டுகளில் புதிதாக 50,000 பேர் அரசு பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.