கோவை பீளமேடு புதூரை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 29). இவர் அப்பகுதியில் சக்தி பிளேஸ்மெண்ட் சர்வீஸ் என்ற பெயரில் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்தார். அப்போது அவர் கனடா நாட்டில் வேலை இருப்பதாகவும், விசா, விமான செலவு உள்ளிட்டவற்றுக்கு சில லட்சங்கள் செலவாகும் என அறிவிப்பு வெளியிட்டார். இதனை நம்பி கோவை உள்ளிட்ட சில ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் சமீபகாலமாக கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிந்து வருகிறது. காலை முதல் இரவு வரை தினசரி மேட்டுப்பாளையம் நகர பகுதியில் சுற்றி திரியும் மாடு- ஆடுகளால் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் தற்போது சாலையில் செல்லும் பொதுமக்களை தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த 2 நாட்களுக்கு முன்பு ...

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களில் முக்கிய பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்களை கொண்டு வருபவர்கள் ஆகியோருக்கு சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் தலா 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி பிரேக் தரிசன அனுமதி அளிக்கப்படுகிறது. அதிகாலை நேரத்தில் துவங்கி காலை எட்டு மணி வரை சுமார் 4000 பக்தர்களுக்கு விஐபி பிரேக் தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. ...

சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி. ஆராசாவுக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக துணை பொதுச்செயலாளரும், தற்போது நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2015ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக ஆ.ராசாவுக்கு சொந்தமான இடங்களில் ...

அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் பெரம்பலூர் – அரியலூர் மாவட்டங்களுக்கு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எஸ்.எஸ்.சிவசங்கர், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு மற்றும் ...

உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் கிரிப்டோகரன்சி எனப்படும் டிஜிட்டல் ரொக்கம் முக்கியத்துவத்தை பெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட பட்ஜெட்டிலும் இந்த ஆண்டு இந்தியாவில் கிரிப்டோகரன்சி அறிமுகம் செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்நிலையில் சில்லறை பண பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை ரிசர்வ் வங்கி டிசம்பர் 1-ல் அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது புழக்கத்தில் ...

விழிஞ்ஞத்தில் அதானி துறைமுகத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் கடும் வன்முறை சம்பவங்களை தொடர்ந்து 50 பாதிரியார்கள் மீது கொலை சதி திட்டம் மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞத்தில் அதானி குழுமம் சார்பில் வர்த்தக துறைமுகம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த துறைமுகம் ...

டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் கொள்கை பகுப்பாய்வு மையம் (CPA), அதன் முதல் உலகளாவிய சிறுபான்மை அறிக்கை வெளியிட்டுள்ளது. மத சிறுபான்மையினரை நடத்தும் விதத்தின் அடிப்படையில் மற்ற நாடுகளை இந்திய அமைப்பு மதிப்பிட்டது இதுவே முதல் முறை. இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையானது மனித உரிமைகள், சிறுபான்மையினர், மத சுதந்திரம் ...

சென்னை: பாஜகவில் உள்ள நடிகைகளை ஆபாசமாகப் பேசிய விவகாரத்தில் திமுக பேச்சாளர் சைதை சாதிக் மன்னிப்பு கோரியுள்ளார். சென்னையில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த திமுக கூட்டம் ஒன்றில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்டச் செயலாளர் இளைய அருணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் திமுக பேச்சாளர் சைதை சாதிக் கலந்து கொண்டு பேசி இருந்தார். ...

அமிர்தசரஸ்: பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த டிரோனை எல்லைப்பாதுகாப்பு படை வீராங்கனைகள் சுட்டு வீழ்த்தினர். 3.11 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் சஹர்பூர்கிராமத்தில் நேற்று முன்தினம் எல்லைப்பாதுகாப்பு படையின் பெண் வீரர்கள் குழு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பகல் 11 மணியளவில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து டிரோன் ஒன்று இந்திய எல்லைக்குள் ...