ஐநா பாதுகாப்பு கவுன்சிலிலும் உரிய மாற்றம் தேவை – ஜெய்சங்கர் உரை..!

ஐநா: ஜி 20 அமைப்பில் ஆப்பிரிக்காவை இணைத்தது போல ஐநா பாதுகாப்பு கவுன்சிலிலும் உரிய மாற்றம் தேவை என்று  அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.

78வது ஐநா பொதுச்சபை அமர்வில் இந்தியாவின் சார்பில் மத்திய  வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசியதாவது: இந்தியாவில் சமீபத்தில் முடிவடைந்த ஜி20 உச்சிமாநாட்டில் ஆப்பிரிக்க யூனியனை நிரந்தர உறுப்பினராக இணைப்பதற்கான இந்தியாவின் முன்முயற்சியின் உதாரணமாக கொண்டு ஐநா பாதுகாப்பு கவுன்சிலை சமகாலத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் இந்தியாவின் முன்முயற்சியால், ஆப்பிரிக்க யூனியன் ஜி 20ல் நிரந்தர உறுப்பினராக அனுமதிக்கப்பட்டது. இதன் மூலம், நீண்டகாலமாக மறுக்கப்பட்ட ஒரு முழு கண்டத்திற்காகவும் நாங்கள் குரல் கொடுத்தோம். இந்த சீர்திருத்தத்தின் அடிப்படையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலை சமகாலமாக மாற்றுவதற்கு ஊக்கமளிக்க வேண்டும்.’ என்றார்.

ஐ.நா பொதுச் சபையின் பொது விவாதத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் தனது உரையைத் தொடங்கும் போது, “பாரதத்திலிருந்து நமஸ்தே” என்று தெரிவித்தார். 17 நிமிடங்களுக்கு மேல் கூப்பிய கைகளுடனும் அவர் உரையாற்றினார். ‘நமஸ்தே ப்ரம் பாரத்’ என்று அவர் தனது உரையைத் தொடங்கினார்.