கோவை : தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ஹவாலா பணம் கடத்தபடுவதாக பாலக்காடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் வாகன சோதனை நடத்த உத்தரவிட்டார். அதன்படி கசபா போலீசார் புதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கரடிக்காடு பகுதியில் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கோவையில் இருந்து வாளையார் வழியாக பாலக்காடு நோக்கி சொகுசு ...

சென்னை: இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று வெளியிட்டார். நாடு முழுவதும் இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மின்னணு இயந்திரங்களை சரிபார்த்தல், வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்தல், வாக்குச்சாவடிகளை தயார் செய்தல் ஆகிய ...

கோவையில் தங்க நகைகளுடன் தலைமறைவான நகை பட்டறை தொழிலாளி – வழக்கு பதிவு செய்து தேடி வரும் காவல்துறை   கோவை கடைவீதி அடுத்த சாமி அய்யர் புது வீதி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (30 ). இவர் அதே பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார் .இவரது நகை பட்டறையில் சலீவன் வீதி பகுதியைச் ...

நாடாளுமன்ற மக்களவை பொது தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. மாறாக, பாஜக தீவிரமாக களத்தில் இறங்கி தேர்தல் பணியாற்றி வருகிறது. இதனால் ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் தேர்தலில் தனித்து களமிறங்கும் முடிவை எடுத்திருப்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் ...

ராமர் கோயில் திறப்பு விழாவை மக்கள் நேரலையில் காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள எல்.ஈ.டி. திரைகள் அகற்றப்பட்டதை எதிர்த்து நிர்மலா சீதாராமன் எக்ஸ் தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்யும் வகையில் பதிவு செய்துள்ளார். 500 ஆண்டுகால நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோயில் இன்று திறக்கப்பட உள்ளது. ‘பிரான் பிரதிஷ்டா’ ...

இந்திய நீதிப் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று அசாமில் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி அங்குள்ள கோயிலுக்கு சென்றபோது உள்ளே அனுமதிக்காமல் போலீசார் தடுத்து நிறுத்தினர்.இதனால் அங்கு போராட்டம் நடைபெற்றது. இந்தியாவின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைப்பயணமான ‘இந்திய நீதி பயணம்’ கடந்த ஜன. 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. ...

சென்னை: சென்னை புத்தக காட்சி நேற்று நிறைவு பெற்றது. மொத்தம் 15 லட்சம் வாசகர்கள் வருகை தந்திருந்த நிலையில், ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) 47-வது சென்னை புத்தக காட்சி நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த 3-ம் தேதி கோலாகலாமாக தொடங்கியது. விளையாட்டுத்துறை ...

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதிக்கு உட்பட்ட தொட்டம்பாளையம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு  பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி முன்னிலை வகித்தார். எம்ஜிஆர் மன்ற நிர்வாகி ரவி வரவேற்றார். முன்னாள் அமைச்சரும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ. ...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கூசாலிபட்டியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகத்துக்கு சென்று முற்றுகையிட்டனர். அவர்கள், டிஎஸ்பி வெங்கடேனிடம் புகார் மனு வழங்கினர். அதில், ‘‘கூசாலிபட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் மகளிர் சுய உதவிக்குழுவில் ஏராளமான பெண்களை சேர்த்து மாவு அரைக்கும் எந்திரம் வாங்கி தொழில் செய்வதற்காக ...

ரயில்வேயில் வேலை ரெடி ரூ 15 லட்சம் வாங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்த விஜயகுமாருக்கு போலீஸ் வலை வீச்சு சென்னையில் இப்போதெல்லாம் நீங்க எதுக்கு கஷ்டப்பட்டு சம்பாதிக்கணும் ஊரை ஏமாற்றி சம்பாதித்தால் போதும் இப்படி ஒரு கும்பல் அலையோ அலை என்று அலைகிறது பொதுமக்களே உஷார் உஷார் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் மைக்கேல் வயது ...