மம்தாவின் அதிரடி… இண்டியா கூட்டணிக்கு வந்த புது சிக்கல்…குழப்பத்தில் காங்கிரஸ்.!!

நாடாளுமன்ற மக்களவை பொது தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை.

மாறாக, பாஜக தீவிரமாக களத்தில் இறங்கி தேர்தல் பணியாற்றி வருகிறது. இதனால் ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் தேர்தலில் தனித்து களமிறங்கும் முடிவை எடுத்திருப்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்கும் முர்ஷிதாபாத் மக்களவை தொகுதி நிர்வாகிகளிடம் தனித்து களமிறங்குவதற்கான பணிகளைத் தொடங்குகள் என மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை மம்தா பானர்ஜி முர்ஷிதாபாத் தொகுதி நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடப் போகிறது, அதற்கு தயாராக இருக்கும்படி உத்தரவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கவே திரிணமூல் காங்கிரஸ் தயாராக இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளைக் கேட்கிறது. இதனால் அதிருப்தி அடைந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வென்ற நிலையில் இப்போது 6 தொகுதிகளைக் கேட்பது நியாயமற்ற பேரம்.
இதனால் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் இணைந்து தேர்தலைச் சந்திக்குமா? அல்லது இந்தியா கூட்டணியில் உள்ள இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாக தேர்தலைச் சந்திக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.