சென்னை: சென்னையில் ரூ.25 கோடி மதிப்பிலான தொன்மையான பச்சைக்கல் லிங்கத்தை விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பச்சைக்கல் லிங்கம் மீட்கப்பட்டது. சென்னை பூந்தமல்லி அருகே தொன்மையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைக்கல் லிங்கமொன்று பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், கடத்தப்பட உள்ளதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்ய ...

கோவை: தகவல் தொழில்நுட்ப துறையில் சிப் தேவைகளுக்கு சீனா, தைவானை தேடுகின்றனர் எனவே சிப் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டுமென கோவையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழில் சார்ந்த 33 தொழில் அமைப்புகளுடன் முதலமைச்ச் ஸ்டாலின் கலந்துரையாடல் நடத்தினார். இந்த கூட்டத்தில் தொழில்துறையில் ...

கோவையில் நடிகர் விஜய் நடித்த “பீஸ்ட்” திரைப்பட வசனத்தை திமுகவினரும், மக்கள் நீதி மய்யத்தினரும் போஸ்ட்டராக அடித்து ஓட்டியிருப்பது சாலையில் பயணிப்போரின் கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகர் விஜய் நடித்த “பீஸ்ட் ” திரைப்படம் மே 7 ம் தேதி வெளியாகி இருந்தது. இந்நிலையில் திமுக தலைமையிலான அரசு பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்ததை குறிக்கும் விதமாக ...

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகள் வெங்கடலட்சுமி (19). இவர் பாலக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கோவை விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (22) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் காதலிக்க தொடங்கி உள்ளனர். இந்நிலையில் வெங்கடலட்சுமி, ...

கோவை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு பெண் செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். மிகுந்த பதற்றத்துடன் பேசிய அந்த பெண் தன்னை கணவர் அடித்து தாக்கி கோவை ராமநாதபுரம், ஒலம்பஸ் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் பூட்டி வைத்துள்ளதாகவும், தன்னை அவர் கொலை செய்ய முயற்சிப்பதாகவும் தெரிவித்தார் . இதை கேட்டு ...

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனம் ஜிஎஸ்டி ரீதியான சில குழப்பங்களுக்காக அந்த மாநில உயர் நீதிமன்றத்தை நாடியது. அந்த நிறுவனத்தின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், “ஜிஎஸ்டி கவுன்சிலின் பணி என்பது முக்கியமான பரிந்துரைகளை வழங்குவதே தவிர… மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்துவதல்ல” என்று தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக ஜிஎஸ்டி கவுன்சில் சார்பில் ...

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு செல்லிடப்பேசி வாயிலாக முத்தலாக் கொடுத்த கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ஜஸ்பூர் குன்குரி காவல் நிலையத்தில் முத்தலாக் தடைச் சட்டப் பிரிவு 4-கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. “தனது கணவர் செல்லிடப்பேசி வாயிலாக முத்தலாக் கொடுத்ததாக ஒரு பெண் புகார் அளித்தார். 2007இல் இஷ்தியாக் அலாம் ...

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரசார் அறப்போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் தங்களின் மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட மாநில காங்கிரஸ் ...

புதுச்சேரி: புதுச்சேரியில் 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில், விரைவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் பாஜகவை பலப்படுத்த மாற்றுக்கட்சியினரை அதிகளவில் இழுக்குமாறு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாம். இதனால், பாஜகவினரும் தி.மு.க, காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சியினருடன் மட்டுமல்லாமல், அ.தி.மு.க, என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகளிடமும் கட்சியில் சேர மறைமுகமாக பேசி வருவதாக ...

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 5 மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, ...