கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100அடியாகும்
இந்த அணையின் நீர் பிடிப்பு பகுதிகளாக கேரள மாநிலம் அட்டப்பாடி,புள்ளி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அப்பர்பவானி ,அவலாஞ்சி,குந்தா போன்றவையாகும்
இந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது இதன் காரணமாக பில்லூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கடந்த வாரத்தில் விநாடிக்கு 6,000கன அடியாக இருந்து வந்த அண்மைக்கான நீர் வரத்து இன்று 10,000கன அடியாக உயர்ந்தது.
அணையின் மொத்த கொள்ளளவான 100அடியில் தற்போதைய நீர் மட்டம் 96 அடியாக உயர்ந்துள்ளது அணையில் இருந்து மின் தேவைக்காக பில்லூர் அனையில் இருந்து 6000கன அடி நீர் உபரியாக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையானது 97அடியை எட்டும் போது அணை திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பில்லூர் அணை நிரம்புவதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.