உத்தரபிரதேச மாநிலத்தில் 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டுள்ள நிலையில், 7வது கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதையொட்டி மிர்சாபூரில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் ...
திமுகவில் சாமானியா்களும் மேயா், துணை மேயா் பதவிக்கு வரமுடியும் என்பதை முதல்வா் மு.க.ஸ்டாலின் நிரூபித்துள்ளாா். கோவை மாநகராட்சி மேயராக கல்பனா வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டாா். அவரது பதவியேற்பு விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி கலந்து கொண்டாா். இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக அரசின் 9 மாதத் திட்டங்களுக்கு மணிமகுடமாக இந்த ...
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளில் 14,250 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு இதனை தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் கடந்த ஆண்டு 55 ஆயிரம் சாலை விபத்துகள் நிகழ்ந்திருப்பதாக கூறிய அவர், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக இயக்குதல், சீட் பெல்ட் மற்றும் தலைக்கவசம் அணிய ...
கோவை:கோவை மாநகராட்சியின் புதிய துணை மேயராக பதவியேற்ற வெற்றிச்செல்வன், தனது தாயை துணை மேயர் இருக்கையில் அமர வைத்து, அழகு பார்த்தார்.கோவை மாநகராட்சி பிரதான அலுவலகமான விக்டோரியா ஹாலில் மேயர், துணை மேயர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நேற்று நடந்தது. இதில், தி.மு.க., மேயர் வேட்பாளரான கல்பனாவும், துணை மேயர் வேட்பாளரான வெற்றிச்செல்வனும் போட்டியின்றி, ஒருமனதாக ...
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோந்த கல்லூரி மாணவா் கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். காதல் விவகாரத்தில் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் அவரது கூட்டாளிகள் உள்பட 17 போ ...
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகத் தமிழ்நாட்டில் காவல் புகார் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், சுதந்திரமான நபரை நியமிக்கும் வகையில் இது சம்பந்தமான திருத்தம் செய்வது குறித்து ஒரு வாரத்தில் விளக்கமளிக்கத் தமிழ்நாடு அரசுக்கு அவகாசம் வழங்கியுள்ளது. சென்னை: காவல்துறை சித்ரவதை, லாக்-அப் மரணங்கள் போன்ற காவல்துறையினருக்கு எதிராகப் புகார்களைக் கொடுக்க அனைத்து ...
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் நிதிநிலை வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா். சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் தமிழக நிதிநிலை குறித்து அவா் பேசியது:- பட்ஜெட் நிதிநிலை வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. ...
கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது . திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அனைத்து துறைகளிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கல்வித்துறையில் பல மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அரசுப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படுகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவை ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, ...
சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் ரூ.5 மதிப்புள்ள தொழிற்சாலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய மருமகன், மகள் ஆகியோர் அபகரித்துக்கொண்டதாக புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் ...
தமிழகம் முழுவதும் வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்ககூடாது என வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்லப்படுவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் வனப்பகுதிகளுக்குள் கால்நடைகள் கொண்டு செல்வதால் விலங்குகள் ஊருக்குள் நுழைந்து விடுவதாகவும், ...