சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், இன்று மேலும் 2,312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்றும் அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை சார்பில் தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்கள், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தினமும் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,தமிழகத்தில் மேலும் 2,312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 35,13,121 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இது நேற்றைய பாதிப்பை விடவும் கூடுதலாக உள்ளது.
தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 2,682 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம்34,57,605 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் இன்று மேலும் ஒருவர் முதியவர் உயிரிழந்துள்ளதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 38,029 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா காரணமாக தனியார் மருத்துவமனைகளில் யாரும் உயிரிழக்காத நிலையில், அரசு மருத்துவமனையில் மட்டும் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 618 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 775070 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கோவை, செங்கல்பட்டு, உள்ளிட்ட பகுதிகளில் நேற்றைய பாதிப்பை விட கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டில் இன்று மட்டும் 370 பேருக்கும், கோவையில் 153 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 6,76,20,263 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 33,058 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை மொத்தம் 20,48,355 ஆண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைக்கு மட்டும் 1,275 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் பெண்கள் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 14,64,728 பேர் பெண்கள் எனவும், இன்றைக்கு மட்டும் 1,037 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 38 திருநங்கைகளுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திருநங்கைகள் இன்று யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.