கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது இதில் பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் தங்களது குறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை கலெக்டர் சமீரனை சந்தித்து அளித்தனர். குறை தீர்ப்பு முகாமையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் மனுக்கள் அளிக்க வரும் பொது மக்களை சோதனை செய்த பின்னரே ...

கோவை பீளமேடு பாலன் நகரைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 46 ) மசக்காளிபாளையத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார் .கடந்த 30 ஆம் தேதி இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பணம் ரூ.15 ஆயிரம் மற்றும் ...

கோவை சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் அருள்மிகு. பூங்குழலி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரி ஜெயராம் 30ஆம் தேதி இரவு பூஜையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார் .நேற்று வந்து பார்த்த போது கோவில் கதவு திறக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. அதிலிருந்த பணம் ரூ 3 ...

ஆனைமலை புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி கோட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி ஆகிய வனசரகங்கள் உள்ளன. இதில் உலாந்தி வனசரகத்தில் உள்ள கோழிகமுத்தியில் வனத்துறையின் யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. இங்கு 26 யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. யானைகளுக்கு பயிற்சி அளித்து பராமரிப்பு மேற்கொள்ளும் பணியில் 52 மாவூத் மற்றும் காவடிகள் உள்ளனர். இந்த முகாமில் ...

கோவை: கோவை மாநகரில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் அனைத்து வகையான கல்லூரிகள் அதிகளவில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் சைபர் கிளப் துவக்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் மத்தியில் சைபர் குற்றங்களை தடுக்க, பாதிக்கப்பட்டவர்களை மீட்க, தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆட்சேபகரமான வீடியோ போட்டோக்கள் வெளியாவதை தடுக்க இந்த சைபர் குழுக்கள் ...

கோத்தகிரி அருகே உயிலட்டி, குன்னியட்டி பகுதியில் கடந்த சில மாதங்களாக 3 கரடிகளின் நடமாட்டம் இருந்தது. அங்கு வனத்துறையினர் வைத்த கூண்டில் 2 கரடிகள் சிக்கின. மற்றொரு கரடி தப்பி ஓடியது. மீண்டும் கூண்டு வைக்கப்பட்டாலும், அதில் சிக்காமல் குடியிருப்பு பகுதிகள், சாலைகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் ஆக்ரோஷத்துடன் உலா வருகிறது. சமீபத்தில் குன்னியட்டி கிராமத்தை ...

தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை வேகப்படுத்துவதற்கான ஆய்வுக்கூட்டம் கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் மற்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன், தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகள்ள சேர்ந்த முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளின் முதல்வர்கள்,அவர்களது ...

கோவை மாவட்டம் அன்னூரில் சத்தி சாலையில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருபவர் ஆண்ட்ரூஸ். இவர் நேற்றிரவு கோவை சாலையில் உள்ள ஒரு தனியார் ஷவர்மா உணவகத்தில் ஆன்லைன் வாயிலாக ஷவர்மா ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.அதன் பின் வாங்கி வந்த அந்த உணவை ஆண்ட்ரூஸ் உண்ணும் போது அவருக்கு வாந்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் ...

கோவை அரசு மருத்துவமணையில் உள்ள எம்.எம். 79-வது வார்டுக்கு இன்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி சுமார் 11.30 மணியளவில் உயிரிழந்தார். ஆனால் அவரது உடலை அந்த வார்டில் இருந்து இரவு 8.30 மணி உயிரிழந்தவரின் உடலை மருத்துவமணை நிர்வாகத்தினர் ...

கோவை வடவள்ளி பகுதியில் செயல்பட்டு வந்த Afford Tours & Travelles என்ற தனியார் நிறுவனத்தினர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி விளம்பரம் செய்தனர். இதை நம்பி கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மற்றும் கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். மொத்தமாக சுமார் 150 நபர்களிடம் ரூ.97 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு ...