கோவை கல்லூரிகளில் குற்றங்களை தடுக்கவும், கண்காணிக்க சைபர் கிளப் தொடக்கம்..!!

கோவை: கோவை மாநகரில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் அனைத்து வகையான கல்லூரிகள் அதிகளவில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் சைபர் கிளப் துவக்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் மத்தியில் சைபர் குற்றங்களை தடுக்க, பாதிக்கப்பட்டவர்களை மீட்க, தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆட்சேபகரமான வீடியோ போட்டோக்கள் வெளியாவதை தடுக்க இந்த சைபர் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கிளப்பில் போலீஸ், கல்லூரி நிர்வாகம், மாணவ, மாணவிகள் ஆகியோரின் வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டு, அதில் சைபர் குற்றங்கள் தடுக்கும் வகையான தகவல்கள் வெளியிடப்படும்.
மாணவ, மாணவிகள் தரப்பில் தெரிவிக்கப்படும் புகார்கள், தகவல்கள் அடிப்படையினர் நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரி பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதை தடுக்க தேவையான கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்திற்குள் கஞ்சா சப்ளையாகிறதா எனவும் கண்காணிக்கிறோம். கல்லூரி நிர்வா–கத்தினரும், கல்லூரிக்குள் கஞ்சா கொண்டு செல்கி–றார்களா? என கவனிக்க வேண்டும். மாணவர்கள் கஞ்சா போதைக்கு பழக்கமாவதை தடுக்க கல்லூரி நிர்வாகங்கள் ஆர்வம் காட்ட வேண்டும். நகரில் எந்தெந்த பகுதியல் கஞ்சா விற்பனையாகிறது. இதை விற்பனை செய்பவர்கள் யார்? என கண்டறியும் பணி நடக்கிறது. பொதுமக்கள் தரும் புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. வாகன திருட்டுகள் தொடர்பாக விசாரணை நடக்கிறது.
வாகனங்களை எந்த ஏரியாவில் திருடுகிறார்கள்? பார்க்கிங் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி வைத்து பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்கிறார்களா? திருட்டு வாகனங்களை வாங்கும் நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருடப்பட்ட வாகனங்களை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பள்ளிகளில் பாதுகாப்பு வசதிகளை செய்ய வலியுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கட்டுமானங்கள், மைதானத்தில் உள்ள தளவாடங்கள் பாதுகாப்பான முறையில் இருக்கிறதா? மாணவ, மாணவிகளுக்கு ஆபத்து ஏற்படும் வகையிலான கட்டுமானங்கள் உள்ளனவா? தங்கும் விடுதிகளில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? என கல்வித்துறையினர் மூலமாக கண்காணிக்க வேண்டும் என தெரிவித்து இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.