சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் பின் புலமாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி கைது..!

கோவை வடவள்ளி பகுதியில் செயல்பட்டு வந்த Afford Tours & Travelles என்ற தனியார் நிறுவனத்தினர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி விளம்பரம் செய்தனர். இதை நம்பி கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மற்றும் கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். மொத்தமாக சுமார் 150 நபர்களிடம் ரூ.97 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கோவை மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணனை நேரில் சந்தித்து புகார் அளித்தனர். இதையடுத்து கோவை மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் கடந்த 13 தேதி, மோகன் கிருஷ்ணன் (39) என்பவரை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான போலிசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். அவருடன் அந்நிறுவனத்தை நடத்திய நடத்திய ராமமூர்த்தி (38) என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சரணயடைந்த ராமமூர்த்தி என்பவரை மாவட்ட குற்றப்பிரிவில் இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ததில் மோசடியில் பின் புலமாக செயல்பட்ட மூன்றாவது நபரான திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த அம்மாசிராஜ்@ராஜன்(48) என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து ரூ.5.10 லட்சம் பணமும் மற்றும் ராமமூர்த்தி என்பவரிடமிருந்து மோசடி செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு மேற்படி இரண்டு நபர்கள் குற்றவியல் நீதித்துறை-6 நடுவர் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்கள்.