கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவரின் உடலை பிணவறைக்கு எடுத்து செல்லாமல் பல மணி நேரம் அதே வார்டில் வைத்திருந்த அவலம்- நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமணையில் உள்ள எம்.எம். 79-வது வார்டுக்கு இன்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி சுமார் 11.30 மணியளவில் உயிரிழந்தார். ஆனால் அவரது உடலை அந்த வார்டில் இருந்து இரவு 8.30 மணி உயிரிழந்தவரின் உடலை மருத்துவமணை நிர்வாகத்தினர் ஊழியர்களை வைத்து பிணவறைக்கு எடுத்து செல்லாமல் அங்கேயே கிடத்தியுள்ளனர்.

அங்கு 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் இருந்த நிலையில் அங்கு வந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம் இறந்தவரின் உடலை எடுத்து செல்லும்படி பலமுறை கூறியும் அலட்சியமாக இருந்துள்ளனர். சுமார் 5 மணி நேரத்திற்குமேலாக உயிரிந்தவரின் உடல் அப்பகுதியிலேயே கிடந்ததாலும் உடலிலிருந்து துர்நாற்றம் வீசியதாலும் சிகிச்சை பெற்று. வந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினார்.

இது தொடர்பாக அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலாவுக்கு தகவல் தெரிவிக்கப்பதையடுத்து அவர் உத்தரவின் பேரில் உடனடியாக இறந்தவரின் உடல் அந்த வார்டில் இருந்து பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் இதுகுறித்து டீன் நிர்மலா அவர்கள் தகவலாக கூறுகையில் – அரசு ஆஸ்பத்திரியில் ஒருவர் இறந்தால் அவரின் இறப்பு குறித்து உறவினர்களிடம் விளக்கப்படும். அதன் பிறகு பிணவறைக்கு அந்த உடல் எடுத்து செல்லப்படும். நேற்று 3.30 மணி அளவில் இறந்தவரின் உடன் வந்தவர்கள் (அட்டெண்டர்) எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை‌. அவர்களை மருத்துவமனை ஊழியர்கள் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் இறந்தவரின் உடலை பிணவறைக்கு எடுத்துச் செல்வதில் தாமதம் ஏற்பட்டது இன்று தகவல் தெரிவித்தார்.

குறிப்பாக கொரனா பரவல் மட்டுமல்லாது தொடர் மழை காரணமாக பல்வேரு தொற்று நோய்கள் பரவும் சூழ்நிலையில் சிகிச்சை பெற்று வரும் வார்டில் இறந்தவரின் உடலை பிணவறைக்கு சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக எடுத்து செல்லாமல் காலம் தாழ்த்தியதுடன் அலட்சியமாக செயல்பட்டதால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அரசு மருத்துவமனையிலேயே அச்சத்திற்கும் அவதிக்குள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.