கோவை சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் அருள்மிகு. பூங்குழலி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரி ஜெயராம் 30ஆம் தேதி இரவு பூஜையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார் .நேற்று வந்து பார்த்த போது கோவில் கதவு திறக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. அதிலிருந்த பணம் ரூ 3 ஆயிரத்தை காணவில்லை. இது குறித்து கோவில் நிர்வாக குழு தலைவர் முருகானந்தன் போத்தனூர் போலீசில் புகார் செய்துள்ளார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.