தமிழகத்தில் இதுவரை குரங்கம்மை தொற்று இல்லை… பாதிப்பு வராது என நிச்சயமாக சொல்ல முடியாது.. அமைச்சர் மா.சுப்ரமணியம் எச்சரிக்கை.!

தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை வேகப்படுத்துவதற்கான ஆய்வுக்கூட்டம் கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் மற்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன், தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகள்ள சேர்ந்த முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளின் முதல்வர்கள்,அவர்களது கல்லூரிகளில் இதுவரை மேற்கோண்டுள்ள உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த விவரங்கள், காத்திருப்போர் பட்டியல் ஆய்வுக்குட்படுத்தபட்டது.முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், கோவிட் பெருந்தொற்று காலத்தில் இந்தியா முழுவதும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொய்வடைந்தடைந்திருந்த்தாகவும்,உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை வேகப்படுத்தவும், கொடையாளிகளை ஊக்குவிக்க முதல்வர் கடந்த சில மாதங்களுக்கு முன் அறுவுறுத்தியத்கேற்க இந்த கூட்டம் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் கடந்த ஏப்ரல் 22 முதல் இன்று வரை 13 கொடையாளர்கள் 50 உறுப்புகளை தானம் செய்துள்ளனர் எனவும் திமுக அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் ஜூலை 2022 வரை 114 பேர் கொடையாளர்களாக இருக்கின்றனர்.அவர்களிடமிருந்து 479 உறுப்புகள் பயன்பெற்றுள்ளது.முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த 14 மாதங்களில் 588 பேர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையால் பயன்படுள்ளதாக தெரிவித்தார். மேலும் கடந்த வாரம் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு மாற்று,எலும்பு ஜவ்வு மாற்று அறுவை சிகிச்சை செய்யபட்டுள்ள ஆறு பேரை நேரடியாக சந்தித்ததாக தெரிவித்த மா.சுப்ரமணியம் இந்தியாவிலேயே அரசு மருத்துமனைஐளில் எலும்புமாற்று,ஜவ்வு மாற்று அறுவை சிகிச்சை செய்து மிக வெற்றிகரமாக ஆறு பேருக்கு மறுவாழ்வு அளிக்கபட்டுள்ளது எனவும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தற்போது வேகமெடுத்துள்ளது என தெரிவித்தார்.

இதுவரை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் ஏராளமாக உள்ளனர் என தெரிவித்த மா.சுப்ரமணியம், சிறுநீரம் 6483,ஈரல் 380 பேர்,இதயம் 43 பேர்,
நுரையீரல் 42 பேர், இதயம் மற்றும் நுரையீரல் 18 பேர் ,
கணையம் 2 பேர்,
கைகள் வேண்டி 23 பேர் காத்து கொண்டுள்ளதாக தெரிவித்தார். உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அளிப்பதிலும், உறுப்புதான விழிப்புணர்வு,தானம் பெற்ற உறுப்புகளை பயன்படுத்துவதிலும் தமிழகம் முன்னிலை வகித்து வருவதாகவும், இதற்கான தேவை என்பது கூடுதலாக உள்ளது என்ற சூழலி்ல் இதை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை முதல்வர் அறிவுறுத்தி வருவதால் இந்த கூட்டம் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மா.சுப்ரமணியம், குரங்கம்மை நோய் பாதிப்பு இதுவரை 80 நாடுகளில் பரவி இருக்கிறது எனவும் தமிழகத்ததில் இதுவரை குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை எனவும் ஏற்கனவே கனடா,அமெரிக்காவிலிருந்து வந்த இரண்டு குழ்ந்தைகளுக்கு கொப்புளங்கள் இருந்ததால் ஆய்வுக்குட்படுத்தபட்ட நிலையில் இருவருக்கும் குரங்கம்மை பாதிப்பு இல்லை என உறுதி செய்யபட்டுளறது.திருச்சியில் சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் வந்த ஒருவருக்கும் நாகர்கோவில் பயணிகள் நான்கு பேருக்கும் தொற்று இருப்பதாக வதந்தி பரவியது.அவர்களுக்கு முழுமையாக பிரசோதனை செய்ததில் குரங்கம்மை பாதிப்பு நேற்று இரவு நெகட்டிங் என வந்துள்ளதாக இல்லை எனவும் தெரிவித்தார்.. தமிழகத்தில் எந்தவகை நோய்பாதிப்பாக இருந்தாலும் வெளிப்படையாக பொதுமக்களுக்கு அறிவிக்க முதல்வர் அறுவுறுத்தியுள்ளார் என தெரிவத்த அமைச்சர் பாதிப்பு உள்ளது என்றால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பார்கள் எனவும் இருக்கிற பாதிப்புகளை கூறுவதால் விழிப்புணர்வு மற்றும் பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள முன்னெரிக்க நடவடிக்கையும் எடுக்க ஏதுவாக உள்ளதால் இதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.மேலும்கேரளாவின் 13 எல்லைகளில், கேரளாவிலிருந்து வருபவர்களின் முகம் மற்றும் முழங்கைகளுக்கு கீழ் தொடர்ந்து கண்காணித்தது வருகின்றோம் எனத்தெரிவித்த அமைச்சர் மா.சுப்ரமணியம்,குரங்கம்மை நோய்தொற்று பாதிப்பு தென்பட தொடங்கியதிலிருந்து தமிழகத்தின் பன்னாட்டு விமான நிலையங்களில் இரண்டு முறை நேரிடியாக ஆய்வு செய்து அறுவுறுத்து வருகிறோம்.மேலும் தமிழகத்தில் இதுவரை பாதிப்பு இல்லை எனவும் பாதிப்பு வராது என நிச்சயம் சொல்லமுடியாது எனவும் உலக சுகாதார நிறுவனம் மிகப்பெரிய அச்சுறுத்தலை கூறியிருக்கிறது,எந்த வகையில் யார் மூலமாக வந்தால் கூட மாதிரிகளை ஆய்வு செய்ய ஐசிஎம்ஆர்-ன் அங்கீரத்தைபெற்று சென்னையில் ஆய்வகம் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு துவங்கி வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

தடுப்பபூசியை பொறுத்தவரை 95.63 சதவீதமாக முதல் தவணை தடுப்பூசி,88.62 சதவீதமாக இரண்டாவது தவணை போட்டுள்ளனர் எனவும் 3 கோடியே 83 லட்சத்து 84 ஆயிரம் பேருக்குக்கு மொத்தமாக பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் எனவும் இதுவரை 9.63 சதவீதம் பேர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.33-வது தடுப்பூசி முகாம் ஐம்பதாயிரம் இடங்களில் வரும் 7 -ம் தேதி நடைபெற உள்ளது எனவும் ஒட்டுமொத்தமாக அனைவரும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யபட்டுள்ளத எனவும் கோவையில் உள்ள கல்லூரிகளுக்களில் 18 வயது நிரம்பியவர்களுக்கு கல்லூரிக்கே சென்று போட அறிவுறுத்த உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மா.சுப்ரமணியம், மக்களை தேடி மருத்துவர் இதுவரை 82,43,875 பேர் பயனடைந்துள்ளனர் எனவும் இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் 98316 பேர் பயனடைந்திள்ளதாகவும் 88,71,09327 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்கு செலவு செய்யபட்டுளறதாகவும், இந்த திட்டத்தில் ஒருலட்சமாவது பயனாளியை முதல்வர் நேரடியாக பார்வையிட உள்ளார் எனவும் தெரிவித்தார். கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கபட்ட நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் புதிய எம்.ஆர்.ஐ ஸ்கேன் வர உள்ளது, கோவை அரசு மருத்துவமனைக்கு 36.60 கோடி நவீன உபகரணங்கள் வாங்க ஒதுக்கீடு,மரபியல் மற்றும் மரபு சார் அரியவகை நோய்களுக்கு மூன்று ஒப்புயர்வு மையங்கள் 2.73 கோடி,கட்டண மருத்துவபிரிவுக்கு ஒருகோடி நடைமுறைபடுத்த நிதி,டையாலிஸ் இயந்திரங்கள் வாங்க 13 லட்சம்,அவசர சிகிச்சை மீட்பு மையம் நிறுவ 53 லட்சம் என நிதிகள் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாகவும்,கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையை பொறுத்தவரை விபத்து மருத்து அவசர சிகிச்சை மையத்திற்கு நவீன் உபகரணங்கள் வாங்க 34.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாகவும் பட்டியிலட்டவர், கடந்த நிதிநிலை அறிக்கையில், கோவை மாவட்டத்திற்கு அறிவிக்கபட்ட இருபது அறிவிப்புகள் ஒவ்வொன்றாக நடைமுறைக்கு வர உள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்..

இந்த ஆய்வு கூட்டத்தின்போது, மருத்துவமனை டீன் நிர்மலா, திமுக மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் Ex Mla உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.