மளிகை கடையின் மேற்க்கூரையை பிரித்து உள்ளே சென்று பணம், சிகரெட், சாக்லெட்கள் கொள்ளை..!

கோவை பீளமேடு பாலன் நகரைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 46 ) மசக்காளிபாளையத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார் .கடந்த 30 ஆம் தேதி இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பணம் ரூ.15 ஆயிரம் மற்றும் சிகரெட் பாக்கெட், ஹார்லிக்ஸ் சாக்லெட் ஆகியவற்றை யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து சிவ சுப்ரமணியன் பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.