தென்னிந்தியாவின் மான்ஸ்செஸ்டர், தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரம், தொழில் வளர்ச்சியிலும், கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும் மேம்பட்ட நகரம் என பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது கோயம்புத்தூர். சுவையான சிறுவாணி குடிநீருக்கும், கொங்கு தமிழுக்கும், மிதமான தட்ப வெப்ப நிலைக்கும் பெயர் பெற்ற கோவை, இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் இடமாக உள்ளது. சுமார் 200 ...
கோவை ரத்தினபுரி கண்ணப்பன் நகரை சேர்ந்தவர் செய்யது அன்வர் (வயது 22) சரக்கு ஆட்டோ டிரைவர். நேற்று இவர் சங்கனூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாருக்கு மது அருந்த சென்றார் .அப்போது அங்கு மது அருந்தி கொண்டிருந்த 3 பேர் சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தனர். இதை செய்யது அன்வர் கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ...
இந்தியாவில் ஜீ 20 நாடுகளின் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. கடந்த 16ஆம் தேதி இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜி 20 தலைவர்கள் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு நடைபெறுவதற்கு முன்பு ஜி20 ...
மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம்: கோவையில் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம் கோவையில் தீபாவளி தினத்தன்று ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலையை சிலர் புகைபடம் எடுத்ததை பார்த்ததாக ஆனந்த் என்ற டாக்ஸி ஓட்டுனர் போலீசாருக்கு தகவல் புகைபடம் எடுத்த நபர்களில் ஒருவர் முகமது ஷாரிக்கை போல இருந்ததாகவும் தலையில் குல்லா அணிந்து இருந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளார். ...
நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வரும் பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 20ம் தேதி சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். ...
தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆளுமை கேள்விக்குறியாக உள்ளதால்தான் அமைச்சர்களிடையே மோதல் ஏற்படுவதாகவும், திராவிட மாடல் ஆட்சிக்கு அதுவும் ஒரு உதாரணம் என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனக்கு 60 வயது தொடங்குவதை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் வழிபட்டபின் மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுர ...
சென்னை: தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர் குலைந்துள்ளது என்றும், திமுகவை ஆளுநர்தான் தட்டிக் கேட்க வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று (நவ.23) நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ...
சென்னை: திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளைஞரணி துணை செயலாளர்களாக ஜோயல், ரகு, இளையராஜா, அடிபுள் மாலிக், பிரகாஷ், பிரபு, சீனிவாசன், பிரதீப் ராஜா, ஆனந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக மகளிரணி தலைவராக விஜயா தாயன்பன் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக மகளிரணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
திமுக மகளிரணி தலைவியாக விஜயா தாயன்பன், செயலாளராக ஹெல்ன் டேவிட்சன், இணைச் செயலாளராக குமரி விஜயகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக பொதுதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- தி.மு.க. சட்ட திட்டம் விதி-18, 19 பிரிவுகளின்படி மாநில மகளிர் அணி – மகளிர் தொண்டர் அணி செயலாளர் மற்றும் ...
பாதுகாக்கப்படுமா ? யானைகளின் உயிர் – வனத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!! கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சியை மலை ஒட்டி அமைந்து இருக்கிறது. உணவுக்காக வன விலங்குகள் அருகிலுள்ள கிராமங்களில் அடிக்கடி வருவது வாடிக்கையாக இருக்கிறது. இதனால் மனித, விலங்கு மோதல் ஏற்படுகிறது. ஊருக்குள் வரும் யானைகளை விரட்டவும், அவற்றை கண்காணிக்கவும் வேட்டை ...













