சூலூரில் வீடுகளில் பூட்டை உடைத்து தொடர் கொள்ளை நடத்திய 3 பேர் கைது- 32 பவுன் நகைகள், ரூ.1.60 லட்சம் பணம் மீட்பு..!

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பூட்டி இருந்த வீடுகளை கண்காணித்து வீட்டின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளை நடந்து வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய எதிரிகளை விரைந்து கண்டுபிடிக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி உட்கோட்டதுணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்த ஆரோக்கியராஜ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.இது சம்மந்தமாக தனிப்படை காவல் துறையினர் குற்றம் நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தும் தீவிர வாகன தணிக்கை செய்தும் தேடி வந்த நிலையில் நேற்று சூலூர் பழைய பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த நபர்களை விசாரணை செய்தபோது அவர்கள் சூலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட முபாரக் அலி (வயது 29) ஜெகநாதன்(வயது 27)) சரவணன் ( வயது24)) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களை கைது செய்து, அவர்கள் பல்வேறு இடங்களில் வீடு புகுந்து கொள்ளையடித்த ரூ.13 லட்சம் மதிப்புள்ள 32 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ‌1, லட்சத்து 60 ஆயிரம் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதனை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்சூலூர் காவல் நிலையத்திற்கு சென்று மீட்கப்பட்ட நகைகளையும், பணத்தையும் பார்வையிட்டார்.வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு எதிரிகளைகைது செய்து களவு போன சொத்துக்களை மீட்ட தனிப்படை காவல் துறையினரை பாராட்டினார்.வீட்டில் தனியாக இருப்பவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தின் தொலைபேசி எண்கள் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறை எண் போன்ற எண்களை தவறாது வைத்திருக்க வேண்டும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்பத்ரி நாராயணன் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.