ஜி 7 நாடுகளின் எண்ணெய் விலை உச்சவரம்பு முடிவுக்கு இந்திய ஆதரவு தெரிவிக்காது என அறிவிக்கப்பட்டதை அடுத்து ரஷ்யா அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: ரஷ்யாவின் எண்ணெய்க்கு ஜி7 நாடுகள் உச்சவரம்பு விலை விதிப்பதற்கு இந்தியா ஆதரவு கொடுக்க முடியாது என கூறியுள்ளது ரஷ்யத் துணைப் பிரதமர் வரவேற்றுள்ளார்
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி 163.5 லட்சம் டன்களாக உள்ளது என்றும் உக்ரைன் போர் சூழலிலும் தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவின் முடிவை வெளியிட்ட மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக ரஷ்யாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply