கோவையில் வெவ்வேறு இடங்களில் நடந்த சோக சம்பவம் – ஒரே நாளில் விபத்தில் 4 பேர் பலி..

கோவை: திருப்பூர் மாவட்டம் முத்தூரை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 44). தொழிலாளி. இவர் பழனிசாமி என்பவருடன் அவினாசி ரோட்டில் நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து நடந்து சென்ற தங்கவேல் மற்றும் பழனிசாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர். அவர்களை வீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தங்கவேலை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரித்தார்.பழனிசாமிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (39). இவர் சலூன் கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று அவர் அன்னூர்-கருமத்தம்பட்டி ரோட்டில் நடந்து வந்தார். அப்போது அங்கு சாலையை கடக்க முயற்சி செய்த போது அந்த வழியாக வந்த மினி லாரி மோதி தூக்கி வீசப்பட்டார். அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரித்தார்.இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று போத்தனூர் சேர்ந்த வில்லியம் (63)என்பவர் நரசிம்ம நாயக்கன் பாளையம்- பெரியநாயக்கன் பாளையம் ரோட்டில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதி இறந்தார். பெரியநாயக்கன் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூரை சேர்ந்தவர் விக்ரம் (22). இவர் தனது மோட்டார் சைக்கிளில் செந்தில் குமார் என்பவருடன் அன்னூரில் இருந்து சிறுமுகை ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் விக்ரம் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் விக்ரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். செந்தில் குமார் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சிறுமுகை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் ஒரே  நாளில் விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.