கோவையில் கடந்த சில நாட்களாக சாரல் மலையும், பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வழிந்து ஓடியது. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த நிலையில் கோவை சாய்பாபா காலனியில் உள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் மழையின் காரணமாக வெள்ளம் புகுந்தது. அங்கு மழைநீர் ...
ஒருதலைக் காதல் என்ற பெயரில் பெண்கள் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதையும், கொலை செய்யப்படுவதையும் தடுக்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சென்னை பரங்கிமலை புறநகர் தொடர்வண்டி நிலையத்தில், காதலை ஏற்க மறுத்ததற்காக மாணவி சத்யா தொடர்வண்டி முன் தள்ளிவிட்டு படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகுவதற்கு ...
தீபாவளிப் பண்டிகை என்றாலே பட்டாசு, வாண வேடிக்கை என சிறுவர்களுக்குக் கொண்டாட்டம் தான். அதேபோல் அரசுத் துறைகளிலும் சில ஊழியர்களும் அதிகாரிகளும் தீபாவளி போன்ற பண்டிகைகள் வந்துவிட்டால் போதும் ; பல்வேறு பணிகளுக்காக அந்தந்த துறையை நாடி வருவோரிடம் லஞ்ச வேட்டை நடத்தத் தொடங்கி விடுவார்கள். இம்முறையும் அது தொடர்ந்ததால் லஞ்ச ஒழிப்புப் போலீசார் மாநிலம் ...
ரஷ்யாவுடன் நேரடியாக தொடர்பு கொண்டாலோ அல்லது நேரடியாக தாக்குதலில் நேட்டோ படைகள் ஈடுபட்டாலோ உலகப்பேரழிவு ஏற்படும் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒருங்கிணைந்த சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து சென்ற உக்ரைன், ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கம் காட்டி, நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு ஆர்வம் செலுத்தியது. இதற்கு ரஷ்யா எதிர்ப்புத் தெரிவித்தது மட்டுமல்லாமல் ...
சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும் என்றும், யாரும் உணர்ச்சிவசப்பட்டு எதையும் பேசக்கூடாது என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டம் 17-ம் தேதி தொடங்குகிறது… எனவே, சட்டப்பேரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து முடிவெடுக்க, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று ...
இந்திய கடற்படையின் ‘அரிஹந்த்’ நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து நடத்தப்பட்ட அணு ஆயுதம் ஏந்திச் செல்லக் கூடிய ஏவுகணையின் சோதனை வெற்றி அடைந்ததாக, ராணுவம் தெரிவித்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணுசக்தியால் இயங்கக் கூடிய ‘அரிஹந்த்’ நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணை ஏவும் சோதனை நேற்று நடத்தப்பட்டது. வங்கக் கடல் பகுதியில் நடந்த இந்த சோதனையின் போது, நிர்ணயிக்கப்பட்ட ...
இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று (அக்.14) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், இமாச்சல பிரதேசத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதாகக் கூறினார். வேட்புமனு தாக்கல் வரும் 17ஆம் தேதி ...
பிரிட்டன் நாட்டை கடலில் மூழ்கடிக்க வல்ல நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை ஐரோப்பாவுக்கு அருகில் புதின் அனுப்பியுள்ளதாக வெளியான தகவல் அச்சத்தை உருவாக்கியுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய நீர்மூழ்கிக் கப்பல் என கருதப்படும் K-329 Belgorod என்னும் கப்பல், ரஷ்யாவுக்கு வடக்கே, Barents கடலில் சமீபத்தில் காணப்பட்டுள்ளது. அதாவது பிரச்சினை என்னவென்றால், Barents கடலின் அருகில் தான் ஐரோப்பாவின் ...
சென்னை: சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மாணவி சத்யாவை கொலை செய்துவிட்டு தப்பியோடிய சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, போலீஸார் ஈசிஆரில் சதீஷை கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படுப்பட்டார். அவரை 14 ...
அண்மையில் கேரளாவில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் உட்பட இருவர் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இதேபோல் திருவண்ணாமலையில் வீட்டை பூட்டிக் கொண்டு மாந்திரீகம் சிலர் செய்ததாகவும், நரபலி கொடுப்பதாகவும் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கச்சராபேட்டை கிராமத்தில் வசித்து வந்த தவமணி-காமாட்சி தம்பதியினருக்கு பூவரசன், பாலாஜி ...