வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் – 9 பேர் கைது..!

கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள வேலாண்டிபாளையம் மருத கோனார் வீதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் பணம் வைத்து சீட்டாடுவதாக சாய்பாபா காலனி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் தமிழரசு அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாடியதாக அதே பகுதியை சேர்ந்த ஜோசப் ( 51) வீரைய்யா (34) சங்கிலித் துரை ( 27 ) செல்வம் (41) ரமேஷ் ( 46 ) சரவணகுமார் ( 30 ) துரைராஜ் ( 57 )அஷ்ரப் அலி (35 )முருகன்( 52 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து சீட்டாட பயன்படுத்தப்பட்ட ரூ 44 ஆயிரத்து 90 பறிமுதல் செய்யப்பட்டது.